பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Lea

394

Lee


மான அல்லது மஞ்சள் கலந்த சிவப்பு நிறமான தூள். ஈயத்தைக் காற்றில் சூடாக்குவதன் மூலம் பெறப்படுகிறது. ஈயக் கண்ணாடி, மட்பாண்ட மெருகுப் பொருள் தயாரிக்கப் பயன்படுகிறது. கசிவு மூட்டுகளை அடைக்க கிளிசரினுடன் கலந்து சாந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

Lead paint (வன்.) ஈய வண்ணச் சாயம்: சாதாரண வண்ணப் பொருள். இதில் வெள்ளை ஈயம் ஆதாரப் பொருளாகப் பயன்படுத் தப்படுவதால் இப்பெயர் பெற்றது.

Lead peroxide: (வேதி.மின்.) ஈயப்பெராக்சைடு : (Pb0) ஓர் ஈயக் கூட்டுப் பொருள் மின்சேமக்கலங்களின் நேர்மின் தகடுகள் இதி லிருந்து தயாரிக்கப்படுகின்றன.

Lead poisoning :ஈய நஞ்சு: வண்ணம் பூசுவோர். ஈயத்தில் அல்லது ஈயப் பொருள்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களைப் பாதிக்கும் ஒரு நோய்.

Leads : (அச்சு.) இடைவரிக் கட்டைகள் : அச்சு வேலையில் வரிகளின் இடைவெளியை அகலமாக்குவதற்கான உலோகத் தகடுகள். இவை அச்செழுத்து அலகுகளின் மடங்குகளில் தயாரிக்கப் பயன்படுகின்றன.

Lead screw : (எந்.)முன்னேற்றத் திருகு : திருகு வெட்டுக் கடைசல் எந்திரத்தின் படுகையின் முன் புறம் நீளவாக்கில் அமைந்துள்ள திருகு.

Lead sponge : (மின்.) ஈயப்பஞ்சு: ஒரு சேமக் கலத்திலுள்ள எதிர்மின் தகட்டிலுள்ள செயல் திறமுடைய தனிமம்.

Lead storage ceil : ஈயச் சேமக் கலம்:கந்தக அமிலத்தின் மின் பகுப்பா னிலுள்ள ஈயப் பெராக்சைடு, பஞ்சு ஈயம் இவற்றினாலான தகடுகளைக்கொண்ட சாதனம்.

Lead tetraethyl: (வேதி.) ஈய டெட்ரா எத்தில்: Pb (C2 H5)4 : உள்வெப்பாலை வெடிப்பைத் தடுக்கும் பொருளாகிய கேசோலின் ஒரு முக்கியமான அமைப்பான் .

Lead wool : (கம்.) ஈயக் கம்பளி : உருகிய ஈயத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் ஈய இழை குழாய் இணைப்புகளில் பயன்படுத் தப்படுகிறது.

Leaf : (அச்சு.) சுவடித்தாள்: மடிக்கப்படாத ஒரு தாள்; அல்லது ஒரு புத்தகத்தில் உள்ளது போன்று மடிக்கப்பட்ட தாளின் இரண்டு பக்கங்கள்.

Leaflet: (அச்சு.) துண்டு வெளியீடு : சில பக்கங்கள் மட்டுமே அச்சிடப்பட்ட சிறிய துண்டு வெளியீடு.

leaf spring :இலை விற்சுருள் : அடுக்கடுக்காக அமைந்த தட்டையான பல தகடுகளினாலான ஒரு விற்கருள். இது உந்து ஊர்திகளில் பயன்படுத்தப்படுகிறது.

Leef work: இலை வேலைப்பாடு: அறைகலன்களின் கால்களிலும் சாய்மானங்களிலும் இலைகளின்