கட்டுப்படுத்திய திருத்தி 89
கட்டுப்படுத்திய திருத்தி 89 கட்டின்மை குறைவான நிலையிலிருந்து மிகுதியான கட்டின்மை நிலையை (maximum freedom) அடைய முயற்சித்தல். (எ.கா) இரு வளிமங்கள் ஒன்றோ டொன்று கலக்கும் நிகழ்ச்சி. இரு வளிமங்களும் கலந்த பின்னர் வளிம மூலக்கூறுகளின் கட்டின்மை அதி கரிக்கிறது. இவ்வாறு கலந்த வளிமத்தை மீண்டும் தனித்தனியே, வேலை செய்யாமல் பிரிக்க இயலாது. மேற்கூறியதில் முதல் கருத்து AH என்பதையும் இரண்டாம் கருத்து OS என்பதையும் குறிப்பன வாகும். இவ்விரு கருத்துகளையும் இணைத்துப் பெறப்படும் நிகர விளைவே கட்டிலா ஆற்றல் எனக் கூறப்படும் AG ஆகும். அதாவது AG=H-TAS கிப்ஸ் கட்டிலா ஆற்றல் - ஹெம்கோல்ட்ஸ் கட்டிலா ஆற்றல் இவற்றிற்குள்ள தொடர்பு: A-E-TS ஹெம்கோல்ட்ஸ் கட்டிலா ஆற்றல் அல்லது மாறா வெப்பநிலையில் இவ்வாற்றல் மாற்றம் AA = AE AS = Qrev T TAS என எழுதலாம். எனவே Tos = QIEV AA = AE - Qrev வெப்ப இயக்கவியல் முதலாம் விதிப்படி q = AE + W அல்லது டA = AE Qrex = WIOV Wrev எனவும் A = Wes எனவும் எழுதலாம். ஆகவே ஓர் அமைப்பின் செயல்சார் பலளின் குறைவு (decrease in work function) மாறா வெப்ப நிலை யில் கிடைக்கக்கூடிய மீள்வழி மீப்பெரும் செயலை (maximum work) அளப்பதாகும். கிப்ஸ் கட்டிலா வெப்பநிலையில் AH TAS - G = H - TS மாறா ஆற்றல் இவ்வாற்றல் மாற்றம் AG AH = ^E + PAV. PAV TAS - எனவே ^G = AE + அல்லது AG = AE TAS + PAV - அல்லது AG = AA + PAV எனவும், AG=AA- PAV எனவும், AG = Wrgy - PAV எனவும் எழுதலாம். எனவே - ^G என்பது P-V வேலையல்லாத பிற நிகர வேலைகளைக் போன்றவை) குறிக்கிறது. (மின்வேலை. வேதிவேலை பா. குற்றாலிங்கம் நூலோதி G.W. Castellan, Physical Chemistry Addison-Wesley Publishing Co., Inc., London. 1973; F. W. Sears, Thermodynamics, Addison-Wesley Publishing Co., Inc, London. 1973. கட்டுப்படுத்திய திருத்தி மின்மாற்றியின் மூல மின்னழுத்தத்தை மாற்றுவ தாலோ பளுத்தடையத்தோடு தொடர் இணைப்புச் செய்யப்பட்ட ஒரு தடயத்தை மாற்றுவதாலோ ஒரு திருத்தி (rectifier) வெளியிடும் மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த இயலும். முதல் முறை மிகச் செலவு பிடிக்கக் கூடியது. இரண்டாம் முறை திறன் குறைந்தது. திருத்தி மின்சாரத்தை கடத்தத் தொடங்கும் கோணத்தைக் கட்டுப்படுத்துவதே மிக வசதியான செலவு குறைந்த முறை ஆகும். வளிமக் குழாய்கள் வளிம முனையம் (thyratron), தீமூட்டி (ignition) ஆகியவை இத்தகைய கட்டுப்பாட்டிற்குதவும். சிலிகான் கட்டுப்பாட்டுத் திருத்திகளையும் இந்நோக்கத்திற்குப் பயன்படுத்த லாம். வளிம முனையம், பெரிய கம்பி வலை அமைப்புக் கொண்ட சூடான எதிர் மின்வாய் வளிமக் குழாய்கள் ஆகும். கம்பி வலையில் சரியான மின்னழுத்தம் அளிக் கப்படும் வரை அடர்வில் எரியத் தொடங்குவதை அக்கம்பிவலை தவிர்க்கிறது. தீமூட்டி என்பது குளிர் எதிர் மின்வாய்க் குழாயாகும். அதில் எரி தொடக்கு வலை மின் துடிப்பால் இயக்கப்படுகிறது. எரி தொடக் கிக்குத் தேவைப்படும் குறிப்பிட்ட அளவு திறனைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டுத் திருத்தி (controlled rectifier) ஒரு சிலிகான் அரைக்கடத்திக் கருவி யாகும். தொடக்கிக் கதவு மின்முனையம் (trigger gate electrode ) தொடக்கியின் மின்னழுத்த நிலைக்கு உயர்த்தப்படும்போது அது கடத்தத் தொடங்கு கிறது. . படம்- 1 இல் ஒரு பகுதிக் கடத்தித் திருத்தியின் மின்சுற்றுக் காட்டப்பட்டுள்ளது. 180 மின்பாகை கொண்ட ஒரு முழு அரைச்சுற்று வரை அதன் தொடக்கிப் புள்ளியைக் கட்டுப்படுத்த இயலும், மாறு மின்னோட்ட உள்ளளிப்பின் மேல் முனை நேர்முனை யாக ( +) இருக்கும்போது தேக்கி (capacitor) திருத் தியின் தொடக்கு மின் அழுத்தத்திற்கு ஏற்பு (susce ptibility) செய்யும். அந்தக் காலநிலை எண்ணாலும், கடத்தியின் குறுக்கே உள்ள மின்னழுத்தத்தாலும் நிர்ணயிக்கப்படும்.