106 கட்டுமானக் கருவிகள்
106 கட்டுமானக் கருவிகள் ஆழமும் கொண்ட துளைகளுக்குப் பொதுவாக முதல் ரு வகைகளும் பயன்படுகின்றன. சிறு துளைகளுக்கு இத்துளைப்பான்கள் கையாலேயே பெருந்தூண்களில் ஏற்றப்பட்டுத் தண்டவாளங்களில் (track) தாங்கப் படுகின்றன. சுரங்க (tunnel) வேலைகளில் துளைப் பான்கள் மேடையில் வைக்கப்பட்ட ஒரு கையுடன் பொருத்தப்படும். இந்தக் கை நீரியல் விசையாலோ அழுத்தக் காற்றினாலோ இயக்கப்படுகிறது. இத் துளைப்பானை இயக்குபவர் எளிதாக இயக்கி, தான் விரும்பிய திசையில் துளையிடலாம். விட்டம் மிகுந்த துளைகளைத் துளைப்பதற்குப் பொதுவாகத் திருகு துளைப்பான்கள் பயன்படுகின்றன. ஆனால் 8 செ.மீ. விட்டமுள்ள சிறிய துளைப்பான்கள் பாறைகளின் மையத்திலிருந்து மண் அல்லது மாதிரிகளைப் பெறுவதற்குப் பயன்படுகின்றன. கல் சிறப்புக் கருவிகள். புழக்கத்திலுள்ள, கட்டுமானப் பணிக்கான சிறப்புக் கருவிகளுள் துரப்பணங்கள் (auger), கெட்டிப்பான்கள் (compactor), குத்துத் தூண் சம்மட்டிகள் (pile hammer) ஆகியன குறிப் பிடத்தக்கவை. . துறப்பணம். இது துளைக்கிணறுகள் போடுவதற் கும், குறிப்பிட்ட பகுதியில் நீரை வெளியேற்றத் துளைகள் போடவும், கட்டட அடித்தாங்கலுக்காகத் துளையிட்டுக் கற்காரை நிரப்ப வகை செய்யவும் ஏற்றதாகும். கெட்டிப்பான். கெட்டிப்படுத்தாத நிலையில் தாங்கும் சுமையைவிட மிகு சுமையை ஏற்கும் படி மண்ணையும், தளப்பொருள்களையும் கெட்டிப் படுத்தும் நோக்குடன் கெட்டிப்பான்கள் வடி வமைக்கப்படுகின்றன. கையில் தாங்கிப் பிடிக்கக் கூடிய காற்றியக்கச் சம்மட்டிகளிலிருந்து (pneumatic tamper) 60 டன் நிறைக்கு மேலுள்ள பல எந்திரங்கள் வரை பல தரங்களில் உள்ளன. பெருஞ் சுமை உள்ள ரப்பர் சக்கரத்தாவோ எஃகு உருளை களாலோ கெட்டிப்புச் (compaction) செய்யப்படும். சருக்கு எடையால் (sheer weight) இல்லாமல் மோது விசையால் கெட்டிப்பு நடப்பதற்கு ஏற்றவாறு பல எந்திரங்கள் அதிர்வைத் தூண்டுகின்றன. சக்கர குத்துத்தூண் சம்மட்டிகள். இந்த எந்திரங்கள் அடித் தளங்களில் குத்துத்துாண் ஊன்றுவதற்கும், காப்புச் சுவர்கள் (retaining walls), காப்பணைகள் (cofferdam) ஆகியவற்றிற்குப் பட்டைக் குத்துத்தூண்கள் ஊன்று வதற்கும் பயன்படுகின்றன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் குத்துத்தூண் சம்மட்டி ஒரு கயிற்றால் தூக்கப்பட்டு குத்துத்தூணின் மேல் பகுதியில் விழ வைக்கப்பட்டது. இது அடிப்படை மாற்றம் எதுவு மின்றி இன்றும் பழக்கத்திலுள்ளது. எந்திரலாபம் மிகுந்த புது வகைச் சம்மட்டிகளாகிய உண்மையான எந்திரங்கள் நீராவி, காற்று எண்ணெய், நீர்மம், மின்சாரம் ஆகியவற்றால் இயக்கப்படுகின்றன. வழக்க மான அனைத்துச் சம்மட்டிகளிலும் மேற்கூறியவற் றில் ஏதேனும் ஒன்றால் இயங்கும் விசைத்தண்டு (piston) உள்ளது. ஓரியக்கச் சம்மட்டியில் (single acting hammer) சம்மட்டி தூக்கப்பட்டுத் தானாகப் புவியீர்ப்பு விசையால் விழ வைக்கப்படுகிறது. ஈரியக் கச் சம்மட்டியாயின் (double acting hammer) குத்துத் தூண் தலையில் மோதும்படி கீழ்நோக்கி இயக்கப் படுகிறது. மின்சாரத்தால் இயக்கப்படும் அதிர்வுச் சம்மட்டிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இவை விலகு மைய (eccentric) நெம்புருள்களை (cam) உடையவை. வை அதிர்வின் மூலமாகவே குத்துத்தூண்களைக் குறித்தபடி நடுகின்றன.குத்துத்தூண்களை நடுவதற் கான நீரியல் விசைச் சம்மட்டிகள் அரிதாக உள்ளன. சு சாலைத் தளமாக்கி (road planer). இந்த எந்திரம் வழக்கமான மின்னோடிச் சாய்வுச் சீராக்கியைப் போன்ற தோற்றமுடையது. ஆனால், மையத்திலுள்ள அலகுக்குப் பதிலாக உறுதியாக்கப்பட்ட எஃகு பற்களைப் புறத்தில் கொண்ட ஓர் உருளி (drum) உள்ளது. உருளி சுற்றும்போது அதிலுள்ள பற்கள் வெடித்த நிலத்தை அல்லது குலைந்த சுற்காரைத் தளத்தை (pavement) 10 செ.மீ. ஆழத்திற்குச் சிதைத்துப் பொடியாக்கி விடும். இதனால், வலிமை யான அடித்தளத்தின் மேல் புதுப்பரப்பு அமைக்க வாய்ப்பு ஏற்படுகிறது. சாலைப்பரப்பின் உயரத்தைக் கூட்டாமலேயே இதைச் செய்ய முடிகிறது. சாலைப் பரப்பை உயர்த்துவது ஆள்துளைகளின் (man hole) மூடியையும் உயர்த்த வேண்டியதோடு மேலும் பல சிக்கல்களும் தோன்ற வாய்ப்பளித்துவிடும். துரப்பணச் சுரங்கப்பொறி (bore tunnelling ma chine). இது கீழே மிகவும் தொலைவிற்கு நுட்ப மாசுப் பொருத்தவல்ல ஓர் எந்திரமாகும். ஒரு குழாய்ப்பகுதியை நகர்த்தும்போது இங்குள்ள நீரியல் விசையால் பொருந்தும் வளையங்கள் (hydraulic jac- king rings) விரிந்து சுருங்கி முன் பின்னாக உள்ள குழாய்ப்பகுதியை மட்டும் நகர்த்த வழி கிடைப்ப தால் தேவையான ஆற்றலும் குறைந்துவிடுகிறது. மின் நிலையங்கள். கடட லிலும் சில குத்துத்தூண் பணிகளுக்குமன்றி ஏனையவற்றிற்கு இந்நாளில் நீராவி அரிதாகப் பயன்படுகிறது. கட்டுமான எந்திரங்களுக் குப் பெரும்பாலும் விசைத்தண்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் இயங்கிகளிலிருந்து ஆற்றல் பெறப் படுகிறது. இரு முக்கிய காரணங்களால் டீசலின் இன்றியமையாமை பெருகி வருகிறது. முதலாவதாக முற்காலத்தில் புழக்கத்தில் இல்லாத அளவுடைய (size) கட்டுமான எந்திரங்கள் தற்காலத்தில் மிகுதி யாகப் பயன்படுகின்றன. தரம் உயர்த்தப்பட்டதால் டீசல் செலவும் அதனுடைய தொடக்க விலையை விட மிகமிகக் குறைந்து விட்டது. இரண்டாவதாக மிகச்சிறிய அளவுகளில் குறைந்த எடையுள்ள சிக்கன மான டீசல் பொறிகளைத் தயாரிக்க முடிவதால் வை மிகவும் பரவலாகியுள்ளன.