182 கடல்சார் நிலஇயல்
182 கடல்சார் நிலஇயல் . முக்கியமான கடற் படிவுகள், பெருமணல், சிறுமணல், களி, செந்நிறக்களி, உமிழிகள், உருளை மணல், உயிரினக் கூடுகள், திமிங்கில எலும்புகள், நிக்கல், இரும்புக் கற்கள், மாங்கனீஸ் உருண்டைகளாகும். . கடலில் செடிகளும், பாசிகளும், புற்களும், பூண்டு களும், விலங்கினங்களும் உள்ளன. கடலில் வாழும் மிகப்பெரிய உயிரினம் திமிங்கிலம். இவற்றோடு பல வகையான மீன், ஆமை, நத்தை, பவளப் பூச்சி ஆகி யவையும் வாழ்கின்றன (படம் 4). பாசிகளும் புற் களும் சூரிய ஒளி கிடைக்கும் கடல் நீரின் மேற் பகுதியில் மட்டுமே விலங்கினங்களோ காணப்படுகின்றன. ஆனால் மேற்புறத்திலிருந்து ஆழ்கடல் வரை காணப்படுகின்றன. கடற்கனிமங்கள் இரு வகைப்படும். அவை கடல் நீரிலிருந்து பெறப்படும் கனிமங்கள் மற்றும் கடலடி யிலிருந்து கிடைக்கும் கனிமங்கள் என்பன. கடல் நீரில் உப்பு எடுப்பதும், கடலடியில் முத்துக் குளிப் பதும் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் கடல் தொழிலாகும். கடல் உப்போடு நீரில் இருந்து படம் 4. கடலடியில் புகைப்படம் கடற் பூச்சிகள், மீன், பூச்சித்தடம் ஆகியவற்றைக் காணலாம்