244 கடல் மீன் முட்டை
244 கடல் மீன் முட்டை முன்னேற்றம் அடைந்து வருகிறது. பல நாட்ட வர்கள் மீன்களை வளர்த்து மீன் உற்பத்தி யைப் பெருக்குகின்றனர். முட்டையிடும் திறன். காலம், இடம் இவற்றுடன் மீன் குஞ்சுகளின் வளர் பருவம், உணவு வகை, அறுவடைக்கு ஏற்ற பருவம் முதலியவற்றையும் அறிந்து கொள்வது மீன்வள அறிவுக்கு இன்றியமையாததாகும். மீன்கள் மிகுதொலைவு பயணம் செய்து முட்டை களுக்கும், குஞ்சுகளுக்கும் பாதுகாப்பாக அமையும் இடங்களையே இனப்பெருக்கப் பருவகாலங்களில் தேர்ந்தெடுக்கின்றன. பெரும்பாலான இனங்கள், ஆழமற்ற கடலோரப் பகுதிகளில் தங்கள் முட்டை களை இடுகின்றன. முட்டைக் கருவின் வளர்ச்சிக்குத் தேவையான தட்பவெப்ப நிலையும், உப்புத் தன்மை யும் குஞ்சுகளுக்கு ஏற்ற உணவுப் பொருள்களும் இப் பகுதியிலேயே கிடை டைக்கின்றன. இம்மீன்களின் முட்டைகளை மிதக்கும் தன்மையுள்ள முட்டைகள் மிதக்கும் தன்மையற்ற முட்டைகள் என்று ரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். . மிதக்கும் தன்மையுள்ள முட்டைகள். உவர் நீரில் வாழும் மீனினங்களின் முட்டைகள் மிதக்கும் தன்மை உடையவை. இவ்வினங்களில் சில, ஒவ்வொரு சினைத்தூவல் பருவத்தின் போதும் (spawning) லட்சக்கணக்கான முட்டைகளை இடுகின்றன. காட் (cod) இன மீன் ஏறத்தாழ 90 லட்சம் முட்டைகளை இடுகிறது. இவ்வகை மீன் முட்டைகள் நீரின் மேற் பரப்பில் மிதந்துகொண்டு, காற்று நீரோட்டம் அலை களின் உதவியால் இடம் பெயர்ந்து செல்கின்றன. இம்முட்டைகள் அளவில் மிகச் சிறியனவாக (0.5 மி.மீ-2.5 மி. மீ) நிறமற்ற உருண்டையாகவும், நீள்வட்ட வடிவத்திலும் இருக்கும், முட்டைக்குள் இருக்கும் கருவின் உணவு (yolk) பல கண்டங்களாக வகுக்கப்பட்டும் வகுக்கப்படாமலும் இருக்கும். இக்கரு உணவில் சில எண்ணெய்த் திவலைகள் (oil globules) இருக்கும் அல்லது இல்லாமலும் இருக்கலாம். நெத்திலி இனத்தைச் சேர்ந்த மீன்களின் முட்டைகளே நீள் வட்ட வடிவில் இருக்கும் (படம் 1). ஏனைய மீன் களின் முட்டைகள் உருண்டையாக இருக்கும். எடுத்துக்காட்டாக, பொறுவா மீன்களின் முட்டை களிலிருந்து (படம் 2) குஞ்சுகள் பொதுவாக இருபத்து நான்கு மணி நேரத்தில் பொரிந்து வெளிவருகின்றன. குஞ்சுகள் முட்டைக்குள் இருக்கும் காலம் மிகவும் குறைவாகும். மிதக்கும் தன்மையற்ற முட்டைகள். மிதக்கும் தன்மை கொண்ட முட்டைகளை இடும் மீன் இனங் களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மிதக்கும் தன்மையற்ற முட்டைகளை இடும் மீன் இனங்களின் முட்டையிடும் திறன் குறைவாகவே இருக்கும். இவ் வகை மீன்களில் சில, பல முட்டைகளை இடுகின்றன. வளரும் கரு வெட்டுக்கோடு எண்ணெய்த்துளி படம் 1. நெத்திலி மீன் முட்டை மேலும் தங்கள் முட்டைகளுக்குப் பாதுகாப்பான இடத்தையும் தேர்ந்தெடுக்கின்றன. சில மீன் இனங் கள் முட்டைகளைப் பேணுகின்றன. இவ்வகை முட்டைகள் அளவில் பெரியவையாகக் காணப்படும். ஓரலகு மீன் முட்டை பற்றுக்கால்