பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்‌ வெள்ளரி 265

னங்கள் புறப்படும்போது சிறிது தொலைவு கரையில் நகர்ந்து சென்று பின்னர் நீர்ப்பரப்பில் சறுக்கி, தக்க வேகமடைந்தவுடன் மேலெழுந்து பறக்கின்றன. இறங்கும்போது நீர் வழியாக நிலத்தைச் சென்றடை யும். சாதாரண நில விமானங்களுக்கு மிக நீண்ட ஓடுபாதை தேவைப்படுகிறது. ஆனால் இவற்றிற்குச் சில நூறு மீட்டர் நீளமுள்ள ஓடு பாதை போது மானது: மிதப்பும் தேவையில்லை. தரையில் இறங்கும் ஹெலிகாப்டர் விமானங்கள் நீர்ப்பரப்பில் இறங்க வசதியாகக் காற்று நிரப்பிய ரப்பர் மிதப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. ஹெலி காப்டர் கடல் விமானங்கள் நீர்ப்பரப்பில் நேரே இறங்கி ஏறும் தன்மையன. பறக்கும் படகுபோன்ற அமைப்புடைய ஹெலிகாப்டர் விமானங்கள் நீர்ப்பரப்பில் மிதந்தோடும் வசதி படைத்தவை. சில தோற்றமும் வளர்ச்சியும் பயன்களும், முதல் கடல் விமானம் கர்டிஸ் என்னும் அமெரிக்கரால் 1911 இல் கட்டப்பட்டு வெற்றிகரமாகப் பறக்கவிடப்பட்டது. முதல் உலகப்போரின்போது இங்கிலாந்து நாட்டவ ரால் கட்டப்பட்ட F-படகு, கர்டிஸ் கண்டுபிடிப்பை அடிப்படையாகக் கொண்டது. இப்படகுகள் எதிரிப் படைகளை வேவு பார்க்கவும், கண்காணிக்கவும், நீர்மூழ்கிக் கப்பல்களைப் பாதுகாக்கவும், சுடலில் கண்ணி வெடி வைக்கவும், வான-நீர்மீட்புப் பணிகளி லும் பயன்பட்டன. உலகப்போருக்குப்பின் இவ்விமானங்கள் பல நாடுகளுக்கிடையே வணிக நோக்குடன் பயன்படுத்தப் பட்டன. அமெரிக்காவிலிருந்து கியூபா. கனடா ஆகிய நாடுகளுக்கு முதல் பன்னாட்டுப் பயணம் தொடங்கியது. 1930இல் உலகிலேயே மிகப் பெரிய தும் வேகமாகச் செல்லக்கூடியதுமான விமானம் கடல் விமானமேயாகும். இவ்விமானங்கள் மாஸ்கோவி லிருந்து சைபீரியா வழியாக நியூயார்க்கிற்கும். ரோம் நகரிலிருந்து ரியோடிஜெனிரோவுக்கும் செல்லப் பயன்பட்டதுமல்லாமல் சிகாகோவிலிருந்து பசிபிக் கடலைக் கடக்கவும் பயன்பட்டன. அட்மிரல் ரிச்சர்டு இபைர்டு என்பவர் தென் துருவத்தின் வரைபடம் தயாரிக்கக் கடல் விமானத்தைப் பயன்படுத்தினார். ஜெர்மானிய விமான நிறுவனங்கள் விமான அஞ்சல் போக்குவரத்துக்கு இவ்விமானங்களைப் பயன் படுத்தின. பான் - அமெரிக்கன் விமான நிறுவனம் கடல் விமானப்போக்குவரத்தைப் பசிபிக் கடல் வழி யாகவும், அட்லாண்டிக் கடல் வழியாகவும் நடத்தி வந்தது.1931-1939 வரை பந்தயத்திற்காகப் பயன் படுத்தப்பட்ட கடல் விமானங்கள் வேகமாகச் செல்வதில் புதிய வரலாறு படைத்தன. இரண்டாம் உலகப்போர் மூண்டவுடன் போர்க் காலத்திலும் பிற நேரங்களிலும் கடல் விமானங்களின் பயன்பாடு மெல்ல மெல்லக்குறைந்துவிட்டது. அப்போது தாங்கிக்கப்பல் கட்டப்பட்டதும், நில விமானம் கடல் வெள்ளரி 265 விமானங்கள் இறங்க விமான தளங்கள் கட்டப் பட்டதும் இதற்கான இரண்டு முக்கிய காரணங்கள் ஆகும். குறிப்பிடத்தக்க கடல் விமானங்கள். இரண்டாம் உலகப்போரின் முடிவில் கட்டப்பட்ட ஹீயூக்ஸ் ஹெர்குலிஸ் என்னும் சரக்கு ஏற்றிச் செல்லும் பறக்கும் படகு, அலுமினிய உலோகத் தட்டுப்பாடு காரணமாக முழுதும் ஒட்டுப்பலகையால் கட்டப் பட்டு மூவாயிரம் குதிரைத் திறன் கொண்ட எந்திரத் தால் இயக்கப்பட்டது. இதன் எடை 180,000 கிலோ கிராம். இறக்கைகளின் இடைத் தொலைவு மீட்டர். மார்ஸ் என்னும் பறக்கும் படகு 1949 இல் கலிஃபோர்னியாவிலிருந்து ஹவாய்த் தீவுக்கு நிலை யான போக்குவரத்துக்குப் பயன்பட்டது. இதில் முந்நூறு பேர் பயணம் செய்ய முடியும். 95 ஆங்கிலேயரால் கட்டப்பட்ட பிரின்சஸ் என்னும் பறக்கும் படகு லண்டனிலிருந்து நியூயார்க்குக்கு மக்களை ஏற்றிச் செல்லப் பயன்பட்டது. மூவாயிரம் குதிரைத்திறன் கொண்ட 10 எந்திரங்களால் இயக் கப்பட்ட இதன் மொத்த எடை 133,000 கிலோ கிராம். இது 22,000 கிலோ கிராம் எடையைத் தாங்கிக் கொண்டு ஒன்பது கிலோ மீட்டர் உயரத் தில் பறக்கும். டிரேட்விண்ட் என்னும் கடல் விமா னமும். சீ டார்ட் என்னும் நீர்ச்சறுக்கியும் அமெரிக் காவில் பயன்படுத்தப்பட்டன. கடல் வியானங்களால் பலவகை நன்மை உண்டு. இதற்கென்று தனி விமானதளம் தேவையில்லை. சிக்கனம், பாதுகாப்புப் போன்ற நன்மையுண்டு. விமான தளம் கட்டும் செலவு, இட நெருக்கடி. இரைச்சல் போன்ற இடர்ப்பாடுகள் இல்லை. மின் அணு ஆற்றலால் இயங்கும் விமானம் கட்டலாம். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா. ஜெர்மனி போன்ற நாடுகளில் கடல் விமானம் பற்றிய ஆய்வு தொடர்ந்து நடந்து வந்தது. ஆயினும் நில விமானங் களின் முன்னேற்றத்தால் கடல் விமானம் கட்டும் துறை மெல்ல மெல்லப் புறக்கணிக்கப்பட்டு விட்டது. செ.வை. சாம்பசிவம் கடல் வெள்ளரி 1 இந்த உயிரினங்கள் தொல்லுயிர் ஊழியான ஆர் டோவிசியன் காலத்தில் முதல் முதலாகத் தோன் றின. கடல் வெள்ளரி, முள்தோலிகள் (echinoder- mata) தொகுதியைச் சார்ந்த ஹாலோதுராய்டியா வகுப்பைச் சார்ந்தவையாகும். இன்றுள்ள ஏறத்தாழ 1100 கடல் வெள்ளரி இனங்கள் பேரினங்களாகப் பிரிக்கப்பட்டு டென்ட்ரோகைரோட்டைடா,டாக்டி லோகைரோட்டைடா, ஆஸ்பிடோகைரோட்டைடா.