324 கடைசல் பொறி
324 கடைசல் பொறி மறையிடும் அமைப்பு ஆகியவை கடைசல்பொறியின் இன்றியமையா உறுப்புகளாகும். இவை படம் 1இல் காட்டப்பட்டுள்ளன. அடிப்பகுதி. இதுவே கடைசல்பொறியின் அனைத்து உறுப்புகளையும் தாங்குகிறது. இதன் ஒரு முனையில் தலைப்பகுதியும் மறுமுனையில் வால் பகுதியும் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மேல் உளி களுடன் நகரும் பகுதி கவிழ்ந்த 'ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. விசை வெட்டும் கருவி செயல்படும்போது து அதை வெட்டும் திசைக்கு எதிர்த் திசையில் தள்ள முயலும் விசை, கீழ்நோக்கிச் செயல்படும் வெட்டு ஆகிய இரு விசைகளால் உருவாகும் திருகுவிசையைப் (twisting force) படுகை தாங்கக் கூடியதாக இருக்க வேண்டும். இதற்காகப் படுகையின் உட்புறம் குறுக்குச் சட்டங்களால் (diagonal ribs) வலிவூட்டப்படுகிறது. வெட்டும் செயல் நடைபெறும் போ து உருவாகும் அதிர்வுகளைத் தாங்கும் அளவிற்கு அடிப்பகுதி கனமாகவும், தகுந்த அகலத்துடனும் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளன. படுகையின் மேற்பரப்பில் உள்ளே ஒன்றும் வெளியே ஒன்றுமாக இரு வழித்தடங்கள் இவற்றுள் வெளி வழித்தடங்கள் உளிகளுடன் நகரும் பகுதியைத் தாங்குவதற்கும் வழி நடத்திச் செல்வதற்கும் பயன்படும். இதே போல் உள் வழித் தடங்கள் கடைசல்பொறியின் வால் பகுதியைத் தாங்குவதற்கும் வழி நடத்துவதற்கும் பயன்படும். இவ்விரு வழித்தடங்களும் கடைசல் பொறியின் அச்சுக்கு ணையாக உருவாக்கப்பட்டுள்ளன. வழித் தடங்கள் தட்டையாகவோ கவிழ்ந்த V வடிவிலோ அமைக்கப்படுகின்றன. வார்ப்பு இரும்புடன் நிக்கல் அல்லது குரோமியம் சேர்ந்த உலோகக் கலவையி லிருந்து படுகை தயாரிக்கப்படுகிறது. தலைப்பகுதி. இப்பகுதி கடைசல்பொறியின் படு கையின் மேல் இடப்புறத்தில் நிலையாக இணைக்கட் பட்டுள்ளது. உலோகத்தண்டைப் பிடிப்பதற்கும் பல்வேறு வேகங்களில் சுழலச் செய்வதற்கும் இது பயன்படுகிறது. உலோகத் தண்டைச் சுழற்றுவதற்கும் சுழல் வேகத்தை மாற்றுவதற்கும் ஏற்ற அமைப்பு கள் வார்க்கப்பட்ட தலைப்பகுதியின் உள் இருக் கின்றன. இவற்றோடு, கடைசல்பொறியின் அச்சோடு ஒன்றிச் சுழலக்கூடிய குழாய் போன்ற வடிவுடைய ஒரு முதன்மைச் சுழல்தண்டும் (spindle) அமைக்கப் பட்டுள்ளது. இச்சுழல் தண்டின் வெளிப்புறத்தில் பற்றும் கருவிகளை (work holding device) இணைப் பதற்காக மறை உள்ளது. உலோ லெட்டப்படும் உலோகத்தின் தன்மை, கத்தண்டின் விட்டம், வெட்டும் முறை, பொறியின் தன்மை போன்ற பல காரணங்களைப் பொறுத்து வெட்டும் வேசும் மாற்றப்பட வேண்டியுள்ளது. முழுமையான பற்சக்கர ஓட்டம், வேகம் மாற்றக் கூடிய மின்னோடி, தலைப்பகுதியில் இணைக்கப் கப்பட்ட கூம்புக் கப்பி வார் ஓட்டம் (cone pulley belt drive) ஆகிய ஏதேனும் ஒரு முறையில் வேகும் மாற்றப்படுகிறது. 1 2 3 சுழல் தண்டு அ. 5 சுழல் தண்டு 7 8 9 சுழல் தண்டு படம் 2. முழுமையான பற்சக்கர ஒட்டம். முழுமையான பற்சக்கர ஓட்டம். இவ்வகைக் கடைசல் பொறிகளில் நிலைவேக மின்னோடி அமைக்கப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று நெம்புகோல்சுளை இயக்குவதன் மூலம் பல்வேறு அளவுள்ள பற்சக்கரங்கள் மாற்றி மாற்றி ணைக்கப்பட்டு வேகம் மாற்றப்படுகிறது. படம் 2 இல் சுழல்தண்டு அ. நிலைவேக மின் னோடியால் வார் மூலம் சுழற்றப்படுகிறது. இதில் 1,2,3 என மூன்று வெவ்வேறு விட்டமுள்ள பற் சக்கரங்கள் சுழல்தண்டின் அச்சுத்திசையில் நகர்த்தக் கூடியனவாசு உள்ளன. சுழல்தண்டு ஆ இடைச் சுழல்தண்டு ஆகும். இதில் 4.5, 6 என மூன்று பற்சக்கரங்கள் ணைக்கப்பட்டுள்ளன. அச்சுத்திசையில் நகரா, சுழல்தண்டு இ. சுழல்தண்டு அ-வைப்போலவே அச்சுத்திசையில் நகர்த்தக்கூடிய மூன்று பற்சக்கரங்களைக் கொண் 7. 8.6 என டுள்ளது. 1) 1,4-4, 2) 1,4-5,8 3) 1.4-6,9 4) 2,5-4,7 5) 2,5-5,8 6) 2,5-6,9 7) 3,6-4,7 8) 3.6-5,8 9) 3,6-6,9 வை