344 கண்டச்சரிவு
344 கண்டச்சரிவு கண்டசசரிவு கடல் கடலடி நிலப்பகுதிடத்திட்டின் விளிம்பிலிருந்து கடல்தரை நோக்கி, திட்டின் சராசரிச் சரிவை (0°07 ) விட மிகுந்த சரிவுடன் சிந்து செல்கிறது. தரைக்கும் கண்டத்திட்டிற்கும் இடைப்பட்ட சரிவு மிக்க இச்சாய்நிலப் பகுதி கண்டச்சரிவு (continental slope) எனப்படுகிறது. கண்டத்திட்டை நிலத்தின் முடிவுப்பகுதி என்று கருதி.. கண்டச்சரிவை நில அமைப்பின் விளிம்பு என்று பலர் குறிப்பிடுகின்றனர். கண்டத்திட்டின் தொடர்ச்சியே கண்டச்சரிவு என்று கருதி அவையிரண்டையும் சேர்த்துக் கண்டத்திடல் (continental terrace) என்னும் ஒரே சொல்லால் வழங்கினர். கண்டத்திட்டு எந்த இடத்தில் தன் சராசரிச் சரிவைவிட மிகுந்து சரிந்து செல்லத் தொடங்கு கின்றதோ அந்த இடத்தில் கண்டச்சரிவு தொடங்கு கிறது. அதனால் கண்டச்சரிவின் தொடக்கப் பகுதியை எளிதில் கண்டு கொள்ளலாம். ஆனால் அது முடியும் இடத்தை அறிந்து கொள்வது எளி தன்று. இதற்குக் காரணம் சரிவில் ஆங்காங்கே காணப்படும் பீடபூமிகள், பள்ளங்கள், குன்றுகள், எழுச்சிகள் போன்ற பல கிளை நிலத்தோற்றங்கள் உள்ளமையே ஆகும் சரிவில் அமைந்திருக்கும் இத்த கைய இடையீடுகளோடு கண்டச்சரிவு முடிந்து விட லாம் அல்லது அவற்றை அடுத்தும் தொடரலாம். இந்த இடையீடுகளை, கண்ட எல்லை நிலம் (conti- nental borderland) என்பர். இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹெர்மன் வெகனர் என்பார் கண்டச்சரிவு என்னும் சொல்லை இச்சாய்நிலத்திற்குப் பெயராக இட்டார். 1955 இல் ஹிஸென் என்பார் கண்டச்சரிவைக் கண்டத்திட்டின் முடிவெல்லையிலிருந்து கடல்நோக்கி 3° 6' வரை கோணத்தில் சரிந்து செல்லும் கடல்தரையோடு தொடர்புடைய ஓரளவான வன்சரிவு கொண்ட நிலப் பகுதியே கண்டச்சரிவு என்று வரையறுத்தார். வாக கண்டச்சரிவின் அமைப்பு. கண்டச்சரிவு பொது தொடங்கி ஆழத்தில் 100-200 16. 1500- 3000 மீ. ஆழத்தில் முடிகிறது. சரிவின் முடிவுப்பகுதி யில் பேரகழிகள் (trenches) அமையுமானால் சரிவு முடியும் ஆழம் மேலும் உயரும். சரிவின் அகலம்15- 35 கி.மீ. வரை உள்ளது. கண்டச்சரிவு எக்கோண அளவில் சரிந்து செல் கிறது என்பது இன்றியமையாததாகும். கண்டச்சரிவு தொடக்கத்திலிருந்து முடியும் வரை ஒரே கோண அளவில் சரிந்து செல்வதில்லை. பொது துவாகச் சரிவின் மேற்பகுதியில் வன்சரிவும் பின் ஆழம் நோக்கி மென்சரிவும் காணப்படும். இப்பொதுவான நிலைமை அட்லாண்டிக் பேராழியிலும், இந்தியப் பேரகழியிலும் உள்ளது. ஆனால் பசிஃபிக்கின் ஆழப்பகுதியில் வன் சரிவே உள்ளது. உலகம் முழுதுமுள்ள கண்டச்சரிவுகளை ஆய்ந்து சரிவின் முதல் 2000மீ ஆழம் வரைக்கும் சராசரிச் சரிவு4' 17' என்று கணக்கிடப்பட்டுள்ளது. இச்சராசரி,இடத்திற்கு இடம் வேறுபடும். சான் றாக, மலைகள் உள்ள கடற்கரையை அடுத்த கண்டச்சரிவு 3'30' கோணத்திலும், சமவெளியை அடுத்த சரிவு 25 கோணத்திலும், பெயர்ச்சிப்பிளவு கடற்கரையை (fault coast) அடுத்த கண்டச்சரிவு 5'40' கோணத்திலும், பெரும் ஆறுகளுக்கு முன்னால் உள்ள சரிவு 1° 20' கோணத்திலும், நிலையான கடற்கரையை (stable coast) அடுத்துள்ள சரிவு 3' கோணத்திலும் சரிந்து செல்லும். சில இடங்களில் சரிவு இயக்கும் வண்ணம் மிகுந்து காணப்படுகிறது. சான்றாக, சுலிஃபோர்னி யாக் கடற்கரையில் சாண்டியாகோவை அடுத்துச் சரிதல் 45° கோண அளவிலும். ஸ்பெயினில் டொரி னானா முனையை அடுத்து 35° கோண அளவிலும், கியூபாவின் தெற்குக் கடற்கரையை அடுத்து 45°க்கும் மிகுந்த கோண அளவிலும் சரிந்து செல்லும். உலகி லேயே மிகு சரிதல் கொண்ட கண்டச்சரிவு அட்லாண் டிக் பேரசுழியில் கியூபாவிற்குத் தெற்கே அமைந் துள்ளது. இலங்கையை அடுத்துள்ள கண்டச்சரிவு இதைவிட மிகுந்த சரிவு கொண்டுள்ளதாக நம்பப் படுகிறது. சரிவுகளில் காணப்படும் படிவில் பெரும்பாலும் மண் படிவே காணப்படுகிறது. கடற்கரையிலிருந்து தொலைவில் உள்ளதால் மண்படிவே இன்றியமை யாதது. மணலும் ஓரளவு காணப்படுகிறது. பரல் கற்கள், சேறு முதலியன மிகவும் குறைந்த அளவில் பரவியுள்ளன. சரிவின் படிவில் மண் 60% மணல் 25% பரல்கற்கள் (gravel) 10% சேறும் (Ooze), கூடுகளும் (shells) 2% உள்ளன. நிலத்திலிருந்து பல கடத்திகளால் கண்டச் சரிவிற்குக் கொண்டு வரப்படும் பொருள்கள் நீரடி நீரோட்டங்கள், கலங் கல் நீரோட்டங்கள முதலியவற்றால் எடுத்து செல்லப் படாவிட்டால் அப்பொருள்கள் சரிவில் படிந்து படிவுகளாகின்றன. கண்டச்சரிவின் வகை. டீட்ஸ் என்பார் உலகின் கண்டச்சரிவுகளை இளமை, முதிர்வு, முதுமைச் சரிவு கள் என்று சரிவுகளின் அமைப்புகள், அவற்றில் காணப்படும் தோற்றங்கள் போன்றவற்றால் வகைப் படுத்தினார். கல்ஃப் கண்டச்சரிவைப் (rejuvenation) பெற்றது என்றார். உலகில் பலவகைக் கண்டச்சரிவுகள் கின்றன. புத்துயிர் காணப்படு சரிவில் காணப்படும் நிலத்தோற்றங் களுக்கும் அவற்றை ஒட்டியுள்ள கடற்கரைகளுக்கும் தக்கவாறு கண்டச் சரிவுகள் காணப்படுவதால் கடற்