பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டத்திட்டு (நிலவியல்‌) 347

கண்டத்திட்டுகளின் வகைகள், உலகில் கண்டத் திட்டுகள் பலவாறாக அமைந்துள்ளமையால் அவற்றை வகைகளாகப் பிரிப்பது எளிதன்று. கடற்கரையின் தாழ்தலும், உயர்தலும் பனியுகத்து நீர்மட்ட உயர்வு தாழ்வுகளும், திட்டுகளின் அமைப்பும் அவற்றின் மீதுள்ள படிவுகளும் படிவுப் பொருள்களும் தெளி வாகத் தெரிந்திருப்பது கண்டத்திட்டுகளின் சிறப்பான வகைப்பாட்டிற்கு உதவும். இவ் வகைப்பாடு கண்டத் திட்டுகள் பற்றிய தெளிவான ஆய்விற்கு வழி வகுக்கும். மிகு வெப்ப மண்டலத் திட்டுகள். வெப்ப மண்ட லத்தில் வெப்பநிலை மிகுதி; நீர் கலங்கலின்றி இருக்கும்போது பவளங்கள் பல்கிப் பெருகுவதால் இம்மிகு வெப்ப மண்டலத் திட்டுகள் பெரும்பாலும் பவளங்கள் அமைந்த திட்டுகளாகவே உள்ளன. இத் திட்டுகளின் திட்டு விளிம்பு குறையாழத்திலேயே அமைந்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்குக் கிழக்கே அமைந்துள்ள கண்டத்திட்டு, இராமேஸ்வரக் கண்ட த் திட்டு முதலியன இவ்வகையைச் சார்ந்தவையே. க உயர் குறுங்கோடுகளின் திட்டுகள். புவியின் உயர் குறுங்கோடுகளின் கண்டத் திட்டுகள் சீரான சரிவுடன் அமைந்துள்ளன. உலகிலேயே சீரான சரிவுகொண்ட திட்டு வடக்கு உயர் குறுங்கோடுகளில் அமைந் துள்ளது. இவ்வடக்குத்திட்டின் ஆழம் திட்டுகளின் சராசரி ஆழத்தைவிடக் குறைவானதாகும். கடற்கரையின் மலையை ஒட்டிய திட்டுகள். ணை யான மலைத்தொடர் உடைய கடற்கரையை அடுத்த திட்டுகள் குறுகி உள்ளன. இவ்வகைத் திட்டுகளால் பாறைகள் ஆங்காங்கு காணப்படுகின்றன. பல காலப் பாறைகள் தென்பட்டாலும் டெர்சரி (tertiary) காலத்திய பாறைகளே பெரும்பாலும் காணப்படு கின்றன. கழிமுகத்தை அடுத்துள்ள திட்டுகள். ஆறுகளின் கழிமுகத்தை அடுத்து அமையும் கண்டத்திட்டுகள் அகலமானவை. இத்திட்டுகளின் மீது படிகள் போன்ற அமைப்புகள் காணப்படுகின்றன. இவ்வகைத்திட்டுகள் ஆறுகள் கொணரும் படிவுகளால் பெருமளவில் பாதிக்கப்பட்டு விரிந்துள்ளன. ஆறுகளின் கழிமுக (delta) அமைப்பை ஓரளவு இவ்வகைத் திட்டுகள் பெற்றுள்ளன. இத்திட்டுகளின் கடற்கரையை ஒட்டி மண்ணும், திட்டின் முடிவுப்பகுதியில் மணலும் படிந்துள்ளன. மிசிசிபி, சிந்து, கங்கை, நைகர் முதலிய ஆறுகளின் கழிமுகங்களை அடுத்து இவ் வகைத் திட்டுகள் சிறப்பாக அமைந்துள்ளன. பனியாறுகள் பாதித்த நிலம் ஒட்டிய திட்டுகள். பனி யாறுகள் பாதித்த நிலத்தை ஒட்டிய திட்டுகள் அகலமானவையாகும். இத்திட்டுகளில் ஆழமான பள்ளங்களும் குழிகளும் காணப்படுகின்றன. இப் பள்ளங்களில் சராசரி ஆழம் 180 மீட்டருக்கும் மேல் கண்டத்திட்டு (நிலவியல்) 347 செல்கிறது. இவ்வகைத்திட்டுகளில் அமைந்துள்ள நீள் பள்ளங்கள் கடற்கரைக்கு ணையாகவோ குறுக்காகவோ அமையலாம். குறுக்காக அமைந்துள்ள நீள்பள்ளங்கள் பெரும்பாலும் செங்குத்தான மலைப் பாதைகளுக்கிடை யேயுள்ள இறுக்கமான கடற்கால் களுடன் இணைகின்றன. திட்டின் முடிவில் திட்டுக் கரைகள் (banks) காணப்படுகின்றன. பள்ளங்களிலும் குழிகளிலும் மண்ணும் மணலும் கல்லும் படிந்துள் ளன. திட்டுக்கரைக கரைகளில் மணலும் ஓரளவு கற்களும் படிந்துள்ளன. நார்வே, இங்கிலாந்து முதலிய பகுதிகளை அடுத்த திட்டுகள் இவ்வகையைச் சார்ந்தவையே. ஜார்ஜ் திட்டுக் கரைகள் கிராண்ட் திட்டுக்கரைகள் முதலியன, இவ்வகைத் திட்டுகளுள் சிலவற்றின் முடிவில் அமைந்துள்ள புகழ் பெற்ற கரைகளாகும். வலிமையான நீரோட்டங்களுடன் தொடர்புடைய திட்டுகள். வலிமை மிக்க நீரோட்டங்கள் குவிந்தோடும் இடங்களில் திட்டுக் குறுகியோ திட்டு இன்றியோ அமைகிறது. ஃபிளாரிடோ மூந்நீரகத்திற்கு மேற்கே அகன்ற திட்டு உள்ளது. ஆனால் கிழக்கேயும் தென் கிழக்கேயும் திட்டே இல்லாதிருப்பதற்குக் காரணம் வளைகுடா வகை நீரோட்டம்தான். யூகேடன் கால்வாயின் கிழக்குப்புறத்தில் திட்டு இல்லாதிருப் பதற்குக் காரணம் கானரீஸ் வகை நீரோட்டம், அக்கால்வாய் வழியாக வேகமாக மெக்சிகோ வளைகுடாவில் பாய்வதே ஆகும். குறையாழப் பள்ளத்தாக்குகள் உள்ள திட்டுகள். சில கண்டத்திட்டுகளில் ஆழம் குறைந்த பள்ளத் தாக்குகள் உள்ளன. ஜாவா, சுமத்ரா, மலேயா ஆகிய பகுதிகளுக்கும் போர்னியோவிற்கும் இடையே அமைந்துள்ள சுந்தா; திட்டு இவ்வகையைச் சார்ந் ததே. இவ்வகைத் திட்டுகளில் அமைந்துள்ள பள்ளத் தாக்குகள் ஆற்றுப்பள்ளத்தாக்குகள் என்றும், மின் நீர்மட்டம் உயர்ந்ததால் இவை நீரினுள் அமிழ்ந்தன என்றும் குவினன் என்பார் கருதுகிறார். ஆங்கிலக் கால்வாய்த் திட்டிலும் இவ்வகைப் பள்ளத்தாக்கு கள் உள்ளன. ஆங்கிலக் கால்வாய்ப் பள்ளத்தாக்கு கள் ஓதப்பெருக்கின் விளைவு என்று கருதப்படு கிறது. கண்டத்திட்டின் பரவல். சிற்சில இடங்களைத் தவிரப் பொதுவாக உலகின் அனைத்துக் கடற்கரை களைச் சுற்றியும் கண்டத்திட்டு அமைந்துள்ளது. கோசின்னா என்பாரின் கருத்துப்படி உலகக் கண்டத் திட்டுகளின் மொத்தப் பரப்பு 27.49 மில்லியன் ச.கி.மீ. ஆகும். வெகினர் கணக்கின்படித் திட்டுகளின் மொத்தப்பரப்பு 30.6 மில்லியன் ச.கி.மீ. ஆகும். உலகின் கடல் பரப்பில், திட்டின் பரப்பு 7.6% ஆகும். அட்லாண்டிக் பேரகழியின் பரப்பில் 13.3% உம், சிபிக்கின் பரப்பில் 5.7% உம், இந்தியப் பேரகழியின் பரப்பில் 4.2% உம் கண்டத்திட்டுப் பரவியுள்ளது. உலகத் திட்டுகளின் பெரும்பகுதி 50-85°வ குறுங்