கத்தாளை மீன் 435
பல வலிய தகடுகளால் ஆனது. இது பெரிய தலை, தீண்ட கழுத்து, குட்டையான கால்கள் கொண்டது. கால்கள் உடலின் பின்பகுதியில் இணைந்து காணப் படும். கட்டை விரல்கள் இல்லை. எஞ்சிய மூன்று விரல்களும் விரலிடைச் சவ்வினால் (web) இணைந்து நீரில் நீந்துவதற் கேற்றதக அமைவு உடையது. மீன், மெல்லுடலிகளில் ஒருவகையான கணவாய் மீன் (cuttle fish) போன்றவை வ இதன் உணவு ஆகும். உணவைப் பிடிப்பதற்கு நீண்ட இறக்கைகளை அசைக் காமல் நீரில் திடீரென்று மூழ்கித் தத்தித் தத்திச் செல்லும் நீர்தத்திப்புள் ஆகக் கருதப்படுகிறது. உண் மையான கத்தரி மூக்குப்பறவை (puffin, shear water) புரோசில்லேரி பார்மஸ் வரிசையில் புரோசில்லேரிடே குடும்பத்தில் பஃபினஸில் இனத்தில் இடம் பெறும். 12-17 சிறப்பினங்களில் கத்தரி மூக்குப்பறவைகள் இடம்பெறுகின்றன. இது ஏறத்தாழ 35-65 செ.மீ. நீளமுடையது. இப்பறவைகள் கடற்கரைப் பாறைகளிலும், கடற்கரைக்கப்பாலுள்ள தீவுகளிலும் பாறைப்பள்ளங் களிலும் கூடுகள் அமைத்துக் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன.ஒவ்வொரு கூட்டத்திலும் ஆயிரக் கணக்கான ஆண் பெண் பறவைகள் காணப்படும். பாறைத் துளைப்பகுதிக்குள் செல்லும்போதும். வெளிப்படும்போதும், இவை எழுப்பும் ஒலி காதைச் செவிடாக்கும் தன்மையுடையது. பெண் பறவை ஒரு தடவைக்கு ஒரு முட்டைதான் இடும். ஆண், பெண் இரண்டும் குஞ்சுகளைப் பேணும். பெருமளவில் பரவிக் காணப்படும் கத்தரி மூக்குப் பறவைகள்.சூட்டிக் கத்தரி மூக்குப்பறவையின் (sooty shear water-puffinus griseus) நீளம் 50 செ.மீ. இறக்கைகள் விரிந்த நிலையில் 85 செ.மீ. நீள முடையது. நியூசிலாந்து, இவை ஆஸ்திரேலியா. தென் அமெரிக்காவின் தென்பகுதி ஆகிய பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. குளிர் காலங்களில் கடற்கரைக்கப்பால் காணப் அட்லாண்டிக், பசிபிக் படுகின்றன. பஃபினஸ் -பஃபினஸ் வை பல என்பது பொதுவாகக் காணப்படும் மற்றொரு கத்தரி மூக்குப் பறவையாகும். இதன் நீளம் ஏறத்தாழ 30-37 செ.மீ. ஆகும். பிரிந்து உள் பிரிவுகளாகப் (races) காணப்படுகின்றன. வட அட்லாண்டிக் பகுதியிலுள்ள சில பிரிவுகளாவன; பஃபினஸ் பஃபினஸ் பஃபினஸ், பஃபினஸ் பஃபினஸ் நிவெல்லி. இவை ஹவாய்த்தீவுப் பகுதியிலும், மத்தியதரைக்கடல், நியூசிலாந்து கடற் பகுதி ஆகியவற்றிலும் காணப்படுகின்றன. மெலிந்த அலகுடைய அல்லது குட்டைவால் சுத்தரி மூக்குப்பறவை ஆஸ்திரேலியாவில் டலிமிச் பறவை என்றும் அலாஸ்காவில் திமிங்கலப் பறவை என்றும் குறிக்கப்படுகிறது. இதன் நீளம் ஏறத்தாழ 40 செ.மீ. ஆஸ்திரேலியா, டாஸ்மேனியாப் பகுதி கத்தாளை மீன் 435 யில் இனப்பெருக்கம் செய்கின்றன. எஞ்சிய காலங் களில் பசிபிக் கடற்பகுதியில் சுற்றித் திரியும். ஜப்பான் நாட்டுக் கடற்கரை வரை காணப்படும். கத்தரி மூக்குப்பறவைகள் இறைச்சிக்காகவும், எண்ணெய்க்காகவும் பெருமளவில் பிடிக்கப்படு கின்றன. கத்தரி மூக்குப் பறவைகள், குடும்பம் அல்சிடேயில், ஆக்ஸ் முர்ரல்கள், பஃபின்கள் ஆகிய கடற் பறவைகளுடன் இடம் பெறுபவை. இவற்றிற்கு வாத்துப் போன் ற உடல் அமைப்பு (குறிப்பாகக் கால்கள்) காணப்பட்டாலும், அலகு மட்டும், வாத் தின் அலகை ஒத்திராமல் கூர்நுனியைப் பெற்றிருக் கும். கத்தாளை மீன் அ. சங்கரன் தமிழ்நாட்டுக் கடலிலும், இந்தியாவின் பிற பகுதி களிலும் கத்தாளை மீன்கள் காணப்படுகின்றன. இந்தியக் கடற்கரையோரப் பகுதிகளில் 35 வகையான கத்தாளை மீன்களைக் காணலாம். இந்தியாவில் பிடி படும் மீன்களில் 7% இம்மீன்களேயாகும். இந்த மீன் களைப் பொதுவாக முரசொலி மீன்கள் (drummers) என்றும் குறிப்பர், பிடிபட்ட பிறகு இம்மீன்கள் முரசு போன்ற ஒலியை உண்டாக்குவதால் இப்பெயர் ஏற்பட்டுள்ளது. வளரக்கூடிய ஏறக்குறைய ஒன்றரை மீட்டர் பெரிய கத்தாளை மீன்களும் உண்டு. மகாராஷ்ட்ர, வங்க மாநிலக் கடல்களில் இவை பெரிதும் காணப்படு கின்றன. இம்மீன்களின் வயிற்றின் அடியில் பெரிய காற்றுப் பை (air bladder) உண்டு. இவற்றின் உதவி யால் இந்த மீன்கள் மிதக்கின்றன. தமிழ்நாட்டில் காணப்படுகின்ற சுத்தாளை மீன்களில் மிக இயல் பாகக் காணப்படுவது வாய்க்கத்தாளை எனப்படும்