கதிரியக்க முறைக் காலக்கணிப்பு 501
இதில் 1 என்பது சிதைவு மாறிலி (disintegra tion constant) ஆகும். நேரத்திற்கேற்ப அணுக் களின் எண்ணிக்கை குறைவதால் AN At ஓர் எதிர் மறையளவாகும். ஒவ்வொரு கதிரியக்கத் தனிமமும் ஒரு சிறப்பான சிதைவு மாறிலியைப் பெற்றுள்ளது. இச்சிதைவு மாறிலி தனிமத்தின் இயல்பை மட்டுமே பொறுத்தது. பிற இயல் நிலையையோ வேதி நிலை யையோ பொறுத்தது அன்று. வெப்ப நிலை அல்லது அழுத்தம் இதைப் பாதிப்பதில்லை. AN At களின் N என்பது குறிப்பிட்ட கால அளவில் சிதை வுறும் அணுக்களின் பின்னத்தைக் கொடுக்கிறது. AN/N ஓர் அலகு கால அளவில் சிதைவுறும் அணுக பின்னத்தைக் காட்டுகிறது. இது சிதைவு மாறிலி 1 க்குச் சமமாகும். எனவே கதிரியக்க மாறிலி ஓர் அலகு கால இடைவெளியில் சிதைவுறும் அணுக்களுக்கும் மொத்த அணுக்களுக்கும் உள்ள விகிதமாகும். . அணுக்கள் சராசரி ஆயுள்காலம் கொண்டிருப்பன எனக் கொண்டால், என்பது ஒரு குறிப்பிட்ட கதிரியக்கத் தனிமத்தின் சராசரி ஆயுள் காலத்தைக் குறிக்கிறது. இயல்பான கதிரியக்கத் தனிமங்களின் சராசரி ஆயுள்காலம் 10- நொடியிலிருந்து 1028 ஆண்டுகளாக உள்ளது. கதிரியக்கச் சிதைவுக் கொள்கை அணுக்களின் கதிரியக்க மாற்றம் என்பது புள்ளியியல் முறை (statistical process) என்பதைக் காட்டுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் எந்தக் கதிரி யக்க ஐசோடோப் அணு சிதைவுற்றது என்பதைக் கூற யலாது. காண்க.க கதிரியக்கங் காணல் கதிரியக்க முறைக் காலக்கணிப்பு ஜா.சுதாகர் ம உலகின் வயது ஏறத்தாழ 4,500 மில்லியன் ஆண்டு எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பழங்காலந்தொட்டே அறிவியலார் உலகின் வயதைக் காணக் கீழ்க்காணும் முறைகளைப் பின்பற்றியுள்ளனர். அவை இறைமை நூல் முறை (theoiogian method), வானியல் முறை astronomical method) என்பன. இறைமை நூல் முறையில் உலகின் வயது 200 மில்லியன் ஆண்டுகள் என்றும், வானியல் முறையில் 3000 மில்லியன் ஆண்டுகள் என்றும் கூறப்பட்டுள்ளன. பின்னர் நிலப் பொறியியல் முறைகள் மூலமாகப் புவியின் வயதை அறிவியலறிஞர் கணக்கிடத் தொடங்கினர். அதில் கதிரியக்கக் கனிமங்களின் சிதைவு வீதங்களை அடிப் படையாகக் கொண்ட புவியமைப்பியல் முறையே கதிரியக்க முறைக் காலக்கணிப்பு 501 அனைத்தையும் விடப் புதிய முறையாகும். இதை அடிப்படையாகக் கொண்டு உலகின் மிகப் பழைய பாறைகளின் வயது சுமார் 4500 மில்லியன் ஆண்டு கள் என்று முடிவு செய்துள்ளனர். உள்ள பாறைகளில் உள்ள கதிரியக்கக் கனிமங்களான காரியத்துக்கும் யுரேனியத்துக்கும் இடையே உள்ள விகிதம், ஈயத்துக்கும் தோரியத்துக்கும் இடையே விதிதம் முதலியவற்றைப் பொறுத்தும், பாறைக்கனிமங்களில், கதிரியக்கத்தால் ஏற்பட்டுள்ள பல திசை அதிர்நிறமாற்றப் புள்ளியின் (pleochroic holo) தன்மையைக் கொண்டும் பாறைகளின் வயது 7.37 × 10" (Pb) (0) × 0.35 (Th) காலம் (வயது) கணக்கிடப்படும். Po, U, Th ஆகியவை அத்தனிமங் களின் அளவைக் (மாதிரியில்) குறிக்கின்றன. கதிர் இயக்கக் கனிமங்களின் சிதைவு ஒரு சிறந்த நிலப்பொறியியல் (geologic கடிகாரம் clock); யுரேனியம் - 238 என்னும் ஐசோடோப் (isotope) ஆல்ஃபாத் துகளை வெளியிட்டுத் தோரியத்தின் ஐசோடோப்பாக மாறுகிறது. இது ஒரு பீட்டாத் துகளை வெளியிட்டுப் புரோட்டாக்டீனியத்தின் ஐசோடோப்பாக மாறுகிறது. இவ்வாறு 14 பg நிலைகள் கடந்த பிறகு நிலையான காரீயம் (Pb-206) உண்டாகிறது. யுரேனியம்-238 இன் அரை வாழ் நாள் காலம் 4.5 மில்லியன் ஆண்டுகள் ஆகும். யுரேனியமும் தோரியமும் சிதைவதால் ஹீலி யமும், காரீயமும் உண்டாகின்றன. ஹீலிய வளிமம் வெளியேறி விடுகிறது; காரீயம் நிலையாக உள்ளது. சிர்கான், பிச்பிளண்டு, யுரேனினைட், சமாஸ்கைட் மோனோசைட் போன்ற கதிரியக்கக் கனிமங்கள் கதிரியக்கத்தால் உண்டான காரியத்துடனும் சாதாரணக் காரீயத்துடனும் சுலந்தவாறு சூழ்நிலை மாற்றங்களுக்கு உட்படாமல் இருக்குமானால். அவற்றைப் பயன்படுத்தி கதிரியக்கம் எவ்விதக் தில் நடைபெற்றது என்பதைக் கணக்கிட்டுக் காலத்தைத் தெரிந்து கொள்ளலாம். தாய்க் கனிம மான யுரேனியம் வேதி முறைப்படி இணை பிரியாத U-238, U-235 ஆகிய இரண்டு ஐசோடோப்பு u 235 களையும் என்னும் விகிதத்தில் பெற்றுள்ளது. U-235, U-238 ஐ விட விரைவாகச் சிதைகிறது. ஆகவே 1/139 என்னும் விதம், பின்ன டையப் பின்னடையப் சிதைவு மிகுதியாகிக் காண்டே இருக்கும். 1 139 = u 235 U 231 + Pb 3n6 +8 He U 235 Th 232 - Pb 207 + 7 He Ph 2286 He