பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/564

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544 கப்பி

சுமை, 544 கப்பி கப்பிகள் இல்லாவிடில் கிணற்றில் இருந்து நீரை எடுக்க மிகு ஆற்றலைச் செலவழிக்க நேரிடும். புவியீர்ப்புவிசை நீரூடைய வாளியைக் கீழ்நோக்கி இழுக்கும்போது மேல் நோக்கி விசையைச் செலுத்தி னால்தான் வாளி மேலெழும். புவிஈர்ப்பு விசை கீழ் நோக்கி இழுக்க முயற்சிக்கும்போது இதை எதிர்த்து மேல் நோக்கிய விசையைச் செலுத்த வேண்டியுள்ள தால் மிகு ஆற்றலைச் செலவழிக்க நேரிடும். எனவே கிணற்று நீரை எளிதாக வெளியே எடுக்க நிலைக் கப்பி (fixed pulley) ஒன்றைப் பயன்படுத்த வேண்டி யுள்ளது. இதன்மூலம் விசையைக் கீழ்நோக்கிச் செலுத்தும் வாளியை வெளியே இழுக்க முடியும். இதில் மிகு ஆற்றலைச் செலவழிக்க வேண்டிய தேவை இல்லை. வாயிலாகவே கப்பி என்பது ஓர் அச்சில் சுழலக்கூடிய சக்கர மாகும். இச்சக்கரத்தின் சுற்றளவுப்பகுதியின் மையத் தில் கயிறு பொருந்தும்படி ஒரு வரிப்பள்ளம் (groove) அமைந்திருக்கும். கப்பி அச்சில் இணைக்கப்பட்டு ஒரு சட்டத்தில் பொருத்தப்பட்டிருக்கும். நிலைக்கப்பி என்றும் இயங்குகப்பி என்றும் இது இருவகைப்படும். கப்பிகள் நிலையாக ஓர் இடத்தில் இருக்கு மாயின் அவற்றை நிலைக் கப்பிகள் எனவும் (படம்1), கப்பிகள் தம் இடத்தில் இருந்து நகருமாயின் அவற்றை இயங்கு கப்பிகள் (படம் 2) எனவும் குறிப் பிடலாம், முதல்வகை நெம்புகோலுக்கு எடுத்துக் காட்டாக இவற்றைக் கொள்ளலாம். ஏனெனில், இவற்றில் சுமைக்கும் திறனுக்கும் இடையில் ஆதாரத் தானம் அமைந்திருப்பதே காரணமாகும். € G திறன் சுமை, படம் 1.நிலைக்கப்பி படம் 2. திறன்