கம்பளிப் புழு 557
சீவுதல் முடிந்த பின்னர் மீண்டும் கில்லிங் எனப்படும் முறையால் இக்கயிறு நன்கு சீர் செய்யப் படுகிறது. இம்முறை மீண்டும் மீண்டும் அளிக்கப் பட்டுக் கயிற்றிழை ஒருபந்துவடிவில் சுற்றப்படுகிறது. இப்பந்தில் உள்ள கயிற்றிழை 'டாப்' எனப்பட்டு நூல் நூற்பதற்கு விற்கப்படுகிறது. தொழிற்சாலை களில் இந்த எந்திரங்கள் இல்லாமையால், க் கயிற்றிழைகளை வாங்கி அவற்றைப் பல இயற்கை இழைகளுடனும், செயற்கை இழைகளுடனும் கலந்து, கலப்பு நூல் நூற்க இயல்கிறது. இத்தகைய கயிற் றிழைகளைச் சாயம் போடவும் அச்சடிக்கச் (print) செய்யவும் முடியும். பல முறை கில்லிங்கிற்கு ஆளாகும் இழைகள் நன்கு சீரடைகின்றன. கம்பளி யில் உள்ள இழைகளை நன்கு நேராக்கவும் அனைத்து இடங்களிலும் ஒரே பருமனாக ஆக்கவும் தானியங்கி நேராக்கல் (auto leveller) என்னும் தன்மையை இ போதுள்ள எந்திரங்கள் கொண்டுள்ளன. ய நீட்டித்தல். இந்நிலை கில்லிங் என்னும் முறை யின் பின்னர் உள்ளதாகும். கம்பளிக் கயிற்றிழை களைப் பருமனான நிலையிலிருந்து மெல்லியதாக நீட்டித்து அவற்றை நூற்பதற்கு உரிய வகையில் இந்நிலை உருவாக்குகின்றது. இது பிராட்போர்டு முறை (bradford system), காண்டினென்டல் முறை (continental system) என இரு நிலையாகப் பகுக்கப் படுகிறது. பிராட்போர்டு முறையில், கயிற்றிழைகளை நீட்டித்து, முறுக்கேற்றும் செயல்கள் நடக்கின்றன. இது கம்பளிப்புரியிழை (siubbing) எனவும், முறுக்கப் பட்ட கம்பளிஇழை (roving) எனவும் கூறப்படும். சாதாரணமான குழலில் இந்த முறுக்கப்பட்ட கம்பளி இழை நூற்பதற்கு அனுப்பப்படுகிறது. கான்டினென்டல் முறையில் ரோவிங் எனப்படும் தடித்த நூலில் முறுக்களிக்கப் படமாட்டாது. கயிற்றி ழைகள் ஒன்றோடொன்று உராய, பின்னர் பெரிய உருளைகளில் சுற்றப்படுகின்றன. தானியங்கு சீராக் கல் என்னும் கருவி இவ்விழைகள் சீரான நிலை யிலிருக்கப் பெரிதும் உதவுகிறது. நூல் நூற்றல். பிளையர் (flyer), கேப் (cap), ரிங் (ring) மியூல் என்னும் நான்கு வகை நூற்கும் கருவி கள் பயன்படுகின்றன. இவை பிராட்போர்டு முறை, பிரென்ச் முறை என இருவகையாகப் பாகுபாடு செய்யப்படுகின்றன. பிராட்போர்டு முறையில், நூல் நூற்கும் முன்பு கம்பளி இழைகளுக்கு எண்ணெய் இட்டுச் சீவப்பட்டு, பின்னர் நீட்டிக்கப்பட்டு, மிகுந்த முறுக்குகள் கோடுக்கப்படும். இந்நூல் வலிமை மிகுந்ததாகவும், மென்மையாகவும் அமைந்து, தரமுள்ள துணிகள் நெய்ய உதவுகிறது. பிரென்ச் முறையில் இழைகள் எண்ணெய் இடாமலும், முறுக்கற்றும் மென்மை யாகவும், பிசிறுள்ள நூலாகவும் அமைகிறது. கம்பளிப் புழு 557 அண்மைக் காலத்தில், கம்பளி நூல்கள் செல்பில் முறையிலும், சைரோசிபன் முறையிலும் மிகுதியாக உற்பத்தி செய்யப்பட்டுப் பல நாடுகளிலும் புகழ் பெற்றுள்ளன. உற்பத்தியில் பெருக்கம், நூல்கள் சீராகவும் வலிமையுடனும் அமைதல், நூல் நூற்கும் முறைகளில் பல குறிப்பிடதக்க மாற்றங்கள் ஆகியவை இவற்றின் சிறப்புக் கூறுகளாகும். கம்பளி மற்றும் முறுக்கிய கம்பளி நூல்களின் வேறுபாடுகள் கீழ் வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன. கம்பளிநூ ல் சிறு இழை கார்டிங் மட்டுமே முறுக்கற்றவை மெலிந்தவை அதிக விட்டம், மென்மை கம்பளிப் புழு முறுக்கிய கம்பளி நூல் நீள இழை கார்டிங் மற்றும் சீவுதல் முறுக்குடையவை வலிமையுள்ளவை மென்மை, சீராக இருத் தல், கடினமான இயல்பு வே. சுப்பிரமணியன் வண்ணத்துப்பூச்சி, பட்டுப்பூச்சி, அந்துப்பூச்சி ஆகிய வற்றின் தொகுதியான லெப்பிடாப்டீரா (Lepidop- tera) வரிசையைச் சேர்ந்த பூச்சிகள், தம் இனப் பெருக்கத்தின்போது தம்மைப் போன்ற வடிவும் அமைப்பும் உடைய இள உயிரிகளை (larvae) உண் டாக்குவதில்லை; மாறாக, முட்டையினின்றும் வெளி வரும் இள உயிரிகள், தம்மைப்பெற்ற முதிரிகளின் றும் முற்றிலும் வேறுபட்டுக் காணப்படும். புறத் தோற்றம், உள் அமைப்பு, உணவுப் பழக்கம் உணவை உண்பதற்கான வாயுறுப்புகள் போன்ற அனைத்திலுமே இந்த இள உயிரிகள் தனித் தன்மை யுடையவை. இவற்றின் மேல்புறம் மயிர் அடர்ந்து காணப்படுவதால் இவற்றைக் கம்பளிப்பூச்சி அல்லது கம்பளிப்புழு என்பர். சூலுற்ற வண்ணத்துப்பூச்சி தன் இளஉயிரிக்கு உணவாக ஏற்ற குறிப்பிட்ட வகைத் தாவரத்தின் லைகளின் கீழ்ப்புறத்தில் நூற்றுக்கணக்கான முட்டைகளை இடும். இவற்றிலிருந்து சிறு புழு வடி வில் கம்பளிப்புழு வெளி வந்து இடையறாது இலை களைத் தின்று வளரும். வளர்ந்து பலமுறை தோலுரித்து உருமாற்றம் அடைந்து, கூட்டுப்புழுவாகி. இறுதியில் இறக்கைகளை உடைய அழகிய வண்ணத் துப் பூச்சி முதிரியாக மாறும். கம்பளிப்புழுக்கள் நீண்டு, உடல் பருத்து, உருளை வடிவில் இருக்கும், மார்புக் கண்டங்களில் இணைந்த