பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/617

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரித்தல்‌ 597

அதன் உலோகங்களைத் தூய்மையாக்கல். தூய்மையான உலோகத்தில் கரித்தல் எளிதில் நிகழாது. உலோகத் சுரித்தல் தைத் தூய்மைப்படுத்தும்போது எதிர்க்கும் பண்பு கூடுகிறது. ஏனெனில் தூய்மையான உலோகத்தின் உ றுதி குறைவு, விலை மிகுதி. எனவே து சிறந்த முறையாகாது. சேர்க்க சூழ்நிலை மாற்றம். ஒரு சேர்மத்தைச் சேர்த்து அல்லது நீக்கிக் கரித்தலைக் கட்டுப்படுத்தலாம். சூழ்நிலை மாற்றத்தில் ஆக்சிஜன் செறிவைக் குறைக்க லாம். அல்லது தடுப்பானைச் (inhibitor) லாம். எந்த ஒரு பொருள் கரித்தலைத் தாழ்த்துமோ அது தடுப்பான் ஆகும். சிலசமயம் வெப்பநிலையைக் குறைத்து அல்லது கரைசலின் செறிவைக் குறைத்துக் கரித்தலைக் கட்டுப்படுத்தலாம். எனவே த்தத்து வத்தின் அடிப்படையில், விலை குறைவான எஃகு. இரும்பு போன்ற பயன்படுத்திக் பொருள்களைப் கரித்தலிலிருந்து விடுவிக்கலாம். உலோகமற்ற அல்லது அவோகப் பொருள்கள். பல அலோகப் பொருள்களைக் கரித்தல் பாதுகாப்புக் கெனப் பயன்படுத்தலாம். அவை கரி, கிராஃபைட், பீங்கான் பொருள்கள், கண்ணாடி, செங்கல், ஃபினால் ஃபார்மால்டிஹைடு, நைலான் போன்ற ஞெகிழிகள், இயற்கை, மற்றும் செயற்கை ரப்பர், மரம் போன்றவையாகும். வடிவமைப்பு. ஒழுங்கான வடிவமைப்பு, (design) கரித்தலைக் கட்டுப் படுத்தும். அதன்பொருட்டுக் கரைசல்களை அகற்ற அமைப்பின் அடிப்பகுதியில் வடிகால் அமைத்தல்: கரித்தல் நிகழும் பகுதியில் பரப்பை உயர்த்துதல்; குறுகலான பகுதிகள் ஏற்படா வடிவமைத்தல்: உலோகப் பகுதிகளை இணைச்சுத் தரையாணிக்குப் (rivetting பதிலாகப் பற்றவைத்தல் போன்றவற்றைச் செய்யவேண்டும். வண்ணம் வளிமக் கரித்தல். உலோகங்களை வளிமங்கள் தாக்கும்போது அவை மெதுவாக அழியும்: பண்புகள் மாறும்; வளிமக் கரித்தல் நீர்மக் கரித்தலிலிருந்து வேறுபடும். வளிமக் கரித்தலில், கரித்தல் சேர்மம், உலோக மேற்பரப்பில் படர்ந்து, சிலசமயம் பாது காப்புப் படலமாகக் காணப்படும். மேலும் குறிப்பிட்ட பகுதியில் நிகழும் உள்ளார்ந்த மின் வேதிக் கரித்தல் வளிமக் கரித்தலில் தோன்றாது. ஒரு வளிமக் கரித்தலில் நான்கு வகை காணலாம். மூலக்கூறாக, அணுவாக அல்லது அயனி கரைந்து, உலோகத்தில் ஊடுருவும் கரித்தல் சேர்மம், திண்ம யாக வினைகளைக் இருந்து, அதன் வழியே உலோக வளிமம் உலோகத்தில் நிலையில் அணு< அயனி சேர்மம் கரித்தல் ஊடுருவக் அல்லது வளரும்; எளிதில் ஆவியாகும் சேர்மம் தோன்றும்; கரித்தல் சேர்மம் நீர்மநிலையில் தோன்றும். கரித்தல் சேர்மங்கள் நீர்மமாசு, எளிதில் ஆவி கரித்தல் 597 யாகும் பொருளாக அல்லது புறப்பரப்பில் ஒட்டாத திண்மமாக இருந்தால், கரித்தலின்போது புதிய உலோக மேற்பரப்புத் தொடர்ந்து தோன்றக் கரித்தல் தொடர்ந்து நிகழும். பொதுவாகத் தங்கத்தைத் தவிரப் பிற உலோகங்களும் ஆக்சிஜனோடு வினைப் படும். ஹாலோஜன்கள், கந்தக வளிமம் ஆகியவை பெரும்பாலான உலோகங்களைத் தாக்கும். உலோகங் நைட்ரஜன், ஹைட்ரஜன் ஆகியவை பல களோடு வினைப்படும். கார்பன் டை ஆக்ஸைடு, கந்தசு-டை-ஆக்சைடு வளிமங்கள் உலோகங்களைத் தாக்கா. கரித்தல் வினையில் தோன்றும் ஆற்றல் வேறு பாடு அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தாது. திண்மங் களில் தோன்றும் குறைபாடுகளில் நிகழும் பரவுதல் (diffusion) இவ்வேகத்தைக் கட்டுப்படுத்தும். திண்மக் குறைபாடுகளைப் புள்ளிக்குறைபாடு (point defect), அணிக்கோவைக்குறைபாடு (lattice defect), புறப் பரப்பு, கோட்டுக்குறைபாடு (surface and line defect) எனப் பிரிக்கலாம். படிக அணிக்கோவையில் தென் படும் வெற்றிடங்கள் அல்லது இடை வெளிகளிலுள்ள அணுக்கள் (interstitial atoms) புள்ளிக்குறைபாட்டை ஏற்படுத்தும் தாழ் வெப்பநிலையில், புறப்பரப்பு. கோட்டுக்குறைபாடு வழியே பரலக் கரித்தல் நிகழும். உயர்வெப்பநிலையில் இருவகைக் குறைபாடுகளும் கரித்தலுக்கு வழிகோலும். கரித்தல் நிகழும்போது, உலோகத்தின் மேற் பரப்பில் படலம் தோன்றும். இதன் வழியே காற்று, அல்லது பிற வளிமங்கள் எளிதில் புகா. ஈரமற்ற சூழ்நிலையில் இரும்பின்மேல் உள்ள கண்ணுக்குப் புலப்படாத ஆக்சைடு படலத்தின் தடிப்பு 15-50A படலத்தின் தடிப்பை ஆகும். வெப்பநிலை உயர்வு உயர்த்தும். நன்கு ஒட்டிய நிலையில் உள்ள ஆக்சைடு படலம் கரித்தலைத் தடுக்கும். உயர்வெப்பநிலையில் உலோகங்களைவிட அவற்றின் கலவைகள் சிறந்த இவ்வுலோகக் கலவைகள் பாதுகாப்பளிக்கும். குறைந்த வினைத்திறனுடையவையாக இருத்தல் வேண்டும். இவை எளிதில் ஆவியாக மாட்டா. மேலும் உருகுநிலை உயர்வாக இருக்க வேண்டும். இரும்பு உலோகக் கலவையில் கலந்துள்ள குரோமியம், அலுமினியம், நிக்கல், சிலிக்கன் மேற் ஆகியவை பண்புகளை உலோகக் கலவை வைக்கு அளிக் கூறிய கின்றன. ஆய்வு மூலம் கரித்தல் வேகம், அதன் வழிமுறை, விளைபொருளின் இயைபு, படிகவமைப்பு ஆகிய வற்றை அறியலாம். ஆய்வுகளின் பொருட்டு. ஆய்வுத் தகடுகளில் கரித்தலால் ஏற்படும் எடை வேறுபாடு. வளிமங்களின் வினையுறும் பருமன் அல்லது அழுத்த மாறுபாடு. விளையும் படலத் தடிப்பின் அளவு ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இவற்றில் எடை வேறுபாட்டு முறை பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுகிறது.