பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/840

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

820 கவ்விகள்‌

820 கவ்விகள் குறிக்கலாம். இது கடலின் தரைப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட அளவுள்ள பகுதியைக் கவ்வித் தோண்டி, அப்பகுதியிலுள்ள மண்ணையும் உயிரினங்களையும் கொண்டு வருகிறது. சேறு, மண், கூழாங்கல், பாறாங்கல் போன்றவற்றாலான பல்வேறுபட்ட தரைப்பகுதிகளில் காணப்படும் உயிரினங்களின் பருமன், எடை, உற்பத்தி போன்றவற்றைப் பொறுத்து அவ்விடங்களில் வாழும் மீன்களின் வகைகளும், உற்பத்தியும் மாறுபடுகின்றன. எனவே பலவகைத் தரைப்பகுதிகளை ஆய்வதற்குத் தற்போது பல்வேறு கவ்விகள் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பீட்டர்சன் கவ்வி. டென்மார்க் நாட்டைச் சார்ந்த ஆய்வாளர் பீட்டர்சன் என்பார் முதன்முதலில் கவ்விகளைக் கண்டுபிடித்தார். சேற்றை மிகுதியாக்க 4 இரு கொண்டுள்ள 0.1 செ.மீ. தரைப் பரப்பிலிருந்து 1-2 செ.மீ. ஆழத்தில் தோண்டி எடுப்பதற்கு இக்கல்வி* பயன்படுத்தப்பட்டது. சம அளவுள்ள ஓரளவு வட் மான மூடித் திறக்கக்கூடிய குறடு போன்ற உலோக வாளிகள் இக்கவ்வியின் முக்கிய உறுப்பாக அமைந்துள்ளன. இவ்வாளிகளைத் திறந்த நிலையில் வைப்பதற்குப் படத்தில் காட்டியவாறு ஒரு சங்கிலி யும் ஒருவிடுவிப்புக் கொக்கியும் பயன்படுத்தப் படுகின்றன. கொக்கியை இருக்கையில் அமர்த்தி வாளிகளைத் திறந்த நிலையில் வைத்துக் கப்பலின் மேல்மட்டத்திலிருந்து வடம் அல்லது வலிமையான கயிறு மூலம் கவ்வி கடலின் தரைப்பகுதியை நோக்கி இறக்கப்படுகிறது. வாளிகள் தரையைத் தொட்ட தும் அவற்றின் சொந்த எடையின் காரணமாகவும், கவ்வி செலுத்தப்பட்ட வடம் இளகுவதாலும் விடு விப்புக்கொக்கி விலகுவதாலும், ஒவ்வொரு வாளியும் அரைவட்ட அளவுள்ள சேற்றைத் தோண்ட இயலு கி கிறது. கல்வியை மேலே தூக்கும்போது இரண்டு வாளி களும் இடைவெளியில்லாமல் ஒன்று சேர்ந்து விடுவ தால் கவ்விக்குள் அகப்பட்ட சேறும் உயிரினங்களும் வெளியே விழாதவாறு பாதுகாக்கப்பட்டுக் கப்பலின் மேல்தளத்திற்குக் கொண்டு வரப்படுகின்றன. இத் தகைய கவ்வியைக் கண்டுபிடித்தபின் 0.2 செ.மீ. பரப்பிலிருந்து 3 செ.மீ. ஆழம் வரை தோண்டக் கூடிய மற்றொரு வகைக் கவ்வியையும் பீட்டர்சன் கண்டுபிடித்தார். இருப்பினும் மேற்கூறிய இருவகைக் கவ்விகளும், சேறு போன்ற தரைப்பகுதிகளில் மட்டும் பயன்படுத்தத்தக்கனவாக உள்ளமையாலும் கடின மணற்பாங்கான பகுதிகளில் பயன்படுத்தப்படுவ 5 6 படம் 4. வாள்வீன் கவ்வியின் வாளிகள் திறந்த நிலையில் உள்ளன. படம் 5, வாள்வீன் கவ்வியின் வாளிகள் மூடிய நிலையில் உள்ளன. படம் 6. ஓகியன் கவ்வி.