பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கற்காரை

34 கற்காரை கப்பிகளைக் கருங்கல் (granite), சுண்ணாம்புக்கல் (limestone), பளிங்குக்கல் (marble), மணற்கல் (sandstone). பலகைக்கல் (slate) எனப் பாறைகள் பலவகைப்படும். தரமான கருங்கல், சுண்ணாம்புக்கல் முதலியவற்றிலிருந்து உண்டாக்கலாம். கப்பிகளின் பரிமாணம் வேறுபட்டிருக்கும். கப்பிகளின் மீப்பெரு பரிமாணம் கற்காரை எந்த அமைப்புக்குப் பயன்படு கிறதோ அதைப் பொறுத்து அமையும். கற்காரை அணையில், கப்பிகளின் உயர் பரிமாணம் 30-40 செ.மீ. ஆகும். கட்டடங்களில் பயன்படுத்தும் கற்காரையில் உள்ள கப்பிகளின் உயர் பரிமாணம் சாதாரணமாக 20 மி.மீ; சாலையில் உள்ள கற்காரை யின் கப்பிகளின் உயர் பரிமாணம் 50-100 மி.மீ. ஆகும். கப்பிகள் பல்வேறு பரிமாணத்துடன் இருத்தல் நன்று. அப்போதுதான் அவை ஒன்றோடொன்று இணைந்து செறிவுள்ள கற்காரையாக அமையும். வட்டமானவை, பட்டையானவை (flaky), கோணலுற் றவை (angular), நீண்டவை (elongated) எனக் கப்பி களின் வடிவம் வேறுபட்டுக் காணப்படும். சுற்காரை யின் அழுத்தவலிமை கம்பிகளின் அமுக்க வலிமையைக் (compressive strength) கொண்டு அமைவதால் நல்ல பாறைக் கப்பிகளையே பயன்படுத்த வேண்டும். குறிப்பாகக் கருங்கல், சுண்ணாம்புக்கல் இவற்றி லிருந்து றனுள்ள கப்பிகளை உண்டாக்கலாம். கப்பிகளில் களிமண் போன்றவை ஒட்டிக் கொண் டிருக்ககூடாது. நொறுங்கும் பொறியில் உண்டான கப்பிகள் கோணலுற்றவையாக அமைவதோடு புறப் பரப்பு சொர சொரப்பாக (rough) அமைவதால் நல்ல பிணைப்பு ஏற்பட்டுச் செறிவான கற்காரையாக அமையும். (படம் 1). கப்பிகள் கற்காரைக்கு ஏற்றவையா என்பதைக் கப்பிகள் நொறுக்கும் ஆய்வின் (aggregate crushing test) மூலம் அறியலாம். செயற்கையில் உண்டாக்கிய கப்பிகளைப் (artificially created aggregateபயன்படுத்த வேண்டுமேயானால், ஆய்வுமூலம் அவற்றின் பண்பை அறிந்து, ஏற்றவாறு கற்காரைக் கலவையின் விகிதத்தை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். கப்பிகள் பலவேறு பரிமாணம் கொண்டுள்ளனவா என்பதைச் சலித்தல் பகுப்பாய்வு (sieye analysis) மூலம் தரப்பிரிப்புக் கோடு (grade curve) வரைந்து பகுத்தறியலாம். மணல், மணற் பாறைகள் ஆகியவை காற்று, நீர் ஆகியவற்றால் உடைக்கப்பட்டுச் சிறிய துகள்களாகிக் காலப்போக்கில் உருப் பெற்றன.பெரிய துகள்களின் பரிமாணம் 5மி.மீ என்று வரையறை செய்யப் பட்டுள்ளது. ஆற்று மணல் மிகவும் சிறந்தது. ஏனெனில் அது தூய்மையாகவும், கோணலற்றும் இருக்கும். மணலாக வெட்டியெடுக்கும் மணலில் களிமண் கலக்க வாய்ப்புண்டு. இதைத் தவிர்த்தல வேண்டும். பாலை வன மணல் மிகவும் நுண்ணியதாக இருப்பதால், அதைக் கற்காரைக்குப் பயன்படுத்தும் போது, கலவை யில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். கடற்கரை மணலில் உப்பு நிறைந்துள்ளமையால் இதைத் தவிர்க்க வேண்டும். இதைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் கிணற்று நீர் கொண்டு நன்கு கழுவிய பின்னர் பயன்படுத்தலாம். மணலில் இலைச்சருகுகள் எளிதில் கலந்து விடும். இதற்கு மணலைச் சலித்து விட்டுப் பயன்படுத்துதல் நன்று. சிமெண்ட், தொழிற்சாலையில் உருவாக்கப் (அ) போதுமான சிமெண்ட்-மணல் சாந்து இல்லாததால் சீரற்ற, தேன்கூடு அமைப்புள்ள மேற்பரப்பு ஏற்படுகிறது (ஆ) மிகுதியான சிமெண்ட்-மணல் சாந்து உள்ளதால் விளைவு சிறப்பற்றுக்காணப்படும். (இ) சரியான சிமெண்ட்-மணல் சாந்து இருப்பதால் மேற்பரப்பு சீராகவும் விளைவு சிறப்பாகவும் இருக்கும். . படம் 1. மூன்று கற்காரைக் கலவைகள்