பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்றுப்‌ பராமரிப்பு 65

0.5% நீர்மமாகக் கன்றுகளின் மீது வாரம் ஒரு முறை மூன்று வாரங்கள் தெளிக்கவேண்டும். கால் மற்றும் வாய் நோய். இந்நோய் வைரஸ் என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. கன்றுகள் இந்நோய் கண்ட பசுவின் பாலை அருந்துவதால் நோய் தாக்கப்பட்டு இறந்து விடுகின்றன. நோய் கண்ட பகுதிகளில் கன்றுகள் தாய்ப்பாலைச் குடிக்காத வாறு கவனித்துப் பாலைக் கறந்து காய்ச்சி, கன்று களுக்கு ஊட்டுவதன் மூலம் கன்றுகளின் இழப்பைத் தவிர்க்கலாம். வளரும் கன்றுகளைப் பாதிக்கும் நோய்கள், கன்று களில் அஸ்காரிஸ் என்னும் உருண்டைப் புழுக்களால் இருமல், தோலில் சொரசொரப்பு, கழிச்சல், வயிற்று வலி ஏற்படும். இதனால் கன்றுகளின் எடை குறையும். இரத்தச் சோகை காணப்படும். சில சமயங்களில் இப் புழுக்கள் குடலை அடைத்துக் கொள்ளும். எனவே வளரும் கன்றுகளுக்கு மாதம் ஒரு முறை விப்ரசின் என்னும் மருந்தால் குடற்புழு நீக்கம் செய்தல் தேவை, இதைத் தவிர ஸ்ட்ராங்கைல் என்னும் உருண்டைப் புழுக்களும் கன்றுகளைத் தாக்குகின்றன. இவ்வகைப் புழுக்கள் இரத்தத்தை உறிஞ்சி இரத்தச் சோகையை உண்டாக்குகின்றன. பேன்மின்த், பெனா கர் போன்ற மருந்துகள் கொண்டு குடற்புழு நீக்கம் செய்தல் வேண்டும். கன்றுகளின் சாணத்தை மாதம் ஒரு முறை ஆய்வு செய்து எவ்வகைப் புழு தாக்கி யுள்ளது என்பதை அறிந்து ஏற்ற குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். நோய். சத்துக் குறைவால் ஏற்படும் வலிப்பு இளம் வயதில் சுன்றுகளுக்குப் போதிய அளவு தாய்ப் பால் கொடுக்காவிடில் மக்னீசியம் என்னும் சத்துப் பொருள் குறைந்து வலிப்பு நோய் ஏற்படுகிறது; வலிப்பு, முகத்திலுள்ள தசை சுருங்குதல், தடுமாற்ற மான நடை ஆகியன நோய் அறிகுறிகள் ஆகும். பசுந்தீவனம் மற்றும் தாதுக்கலவையை உணவில் கொடுப்பதன் மூலமும் தாது உப்புக்கட்டியைக் கொட்டிவில் தொங்கவிடுவதன் மூலமும் இந் நோயைத் தடுக்கலாம். தோல் நோய்கள. கன்றுகளின் தோல் நோய் ஒருவிதப் பூஞ்சக் காளான்களால் ஏற்படுகிறது. காளான் தலை, முகம், உதடு, கழுத்துப் போன்ற பகுதிகளைத் தாக்குகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகள் தடித்துத் திட்டுத் திட்டாகவும் சாம்பல் நிறமாகவும் காணப்படும். இந்நோய் பிற கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் பரவும் தன்மை வாய்ந்தது. ண்ணி,பேன்,தெள்ளுப் பூச்சியின் தாக்குதல். உண்ணிகள் கன்றுகளைத் தாக்கும்போது உடலில் அரிப்பு ஏற்படுகிறது. தாக்கப்பட்ட பகுதிகள் தடித்து. சாய்ந்து,முடிகொட்டிக் காணப்படும். இதனால் கன்று களின் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்படுகிறது. அ. க 8 5 கன்றுப் பராமரிப்பு 65 உண்ணி கடிப்பதால் காய்ச்சல், ஊட்டக்குறைவு. இரத்தச் சோகை, ஈரல் வீக்கம் ஏற்படும். வாய்க்கூடை போடுவதால் தரையில் உள்ள மண்ணை நக்குவது, கன்றோடு கன்று நக்குவது போன்ற தீய பழக்கங்களை நிறுத்தலாம்; கன்று ஒன்றை ஒன்று நக்குவதால் மயிர் வயிற்றுக்குள் சென்று முடி உருண்டையாக மாறி உணவுக் குழாயை அடைத்து, கன்றின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம். வெ.ஜெயாகிறிஸ்டி கன்றுப் பராமரிப்பு இது சினை மாடுகள் பராமரிப்பில் தொடங்கு கிறது. சினைப் பசுக்களுக்கு 7 மாதச் சினை முதல் அவற்றின் உடல்நிலைக்கும் பால் உற்பத்திக்கும் கொடுக்கும் கலப்புத் தீவனத்துடன் ஒரு கிலோ கலப்புத்தீவனம் மிகுதியாகக் கொடுக்க வேண்டும். சினைக் காலத்தில் ஏறக்குறைய 15-20 கிலோ பசும் புல் கொடுக்க வேண்டும். இத்துடன் நாளொன்றுக்கு ஏறக்குறைய 30 கிராம் சாதாரண உப்பும், 30 கிராம் தாது உப்புக் கலவையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். சினைப்பசுவை நன்கு பராமரித்தால்தான் நலமுள்ள கன்று பிறக்கும். கன்று ஈனும் காலம் நெருங்கும் போது சினை மாடுகளைத் தனியாக அமைதியான சூழ்நிலையில் வைத்துப் பேண வேண்டும். கன்று பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை. கன்று பிறந்ததும் அதன் மூக்கு, வாய், உடல் பகுதிகளின் மீது ஒட்டிக் கொண்டிருக்கும் சளி போன்ற சவ்வைத் தூய உலர் துணியால் நன்கு துடைக்க வேண்டும். பசுவே தன் கன்றை நக்கி நீக்கிவிடும். கன்று ஈன்ற வுடன் அதன் கொப்பூழ்க் கொடியை 1 அங்குலம் விட்டுத் தூய கத்தரியால் வெட்டி. நுனிப் பகுதியில் புஞ்சர் அயோடின் வைக்க வேண்டும். நல மான கன்று 20-30 நிமிடத்தில் எழுந்து நின்று கொள்ளும். சீம்பாலின் தேவை. பிறந்த கன்றுக்கு உடன் சீம்பால் கிடைக்கச் செய்ய வேண்டும். கன்று ஈன்ற வுடன் தாயின் மடியிலிருந்து சுரக்கும் கெட்டியான சிறிது மஞ்சள் நிறமான பாலே சீம்பால் எனப்படும். கன்று பிறந்தபின் பொதுவாக 4 நாள்களுக்குச் சீம்பால் சுரக்கும். சீம்பாலில் புரதம், வைட்ட மின்கள் A, D, E ஆகியன பாலில் உள்ளதைவிட மிகுந்துள்ளன. மேலும் நோய் வாராமல் தடுப்பதற்குரிய எதிர்ப்பாற்றல் பொருள் களும் சீம்பாலில் உள்ளன. இப்பால் குடல் இயக்கத் திற்கும் உதவி செய்கிறது. ஏனைய