பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

அறிவியல் தமிழ்

‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
    தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
    தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்.’[1]

என்ற ஆணையைச் செயற்படுத்துதல் வேண்டும்.


“வெளியுலகில் சிந்தனையில் புதிதுபுதிதாக
விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெல்லாம் சண்டு
தெளிவுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்:
..........................................

உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூல்கள்
ஒருவர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்

சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்”[2]

என்ற கவிஞனின் கட்டளையை நிறைவேற்றுதல் வேண்டும், இதுவே தமிழ் மொழியில் அறிவியல் வளர்ச்சிக்கு உரிய தலையாய தொண்டாகும்; பக்தியுடன் மேற்கொள்ள வேண்டிய விழுமிய பணியுமாகும்.


  1. 2. பாரதியார் 22 தமிழ் 3
  2. 3. பாரதிதாசன் 24 தமிழ் வளர்ச்சி 1,2