பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முத்தி நெறி

109

[மன்னும்-நிலைபெற்ற; மருள்-அஞ்ஞானம்; அருள்- கருணை; ஆழி-கடல்; தரித்து-தாங்கி; இன் அமுதத்து அமுது-இலக்குமி; இரங்கும்-இரக்கம் உறுதல்; பற்று- உபாயம்; வரிப்பவர்-சரணம் அடைபவர்; வன் சரண்- சித்தோபாயம்].

என்று குறிப்பிடுவர். சாத்தியோபாயம் என்பது நம்மான் செய்யப்பெறும் உபாயம். இது பத்தி என்றும், பிரபத்தி[1] என்றும் சாத்திரங்களில் இருவகையாகப் பேசப்பெறும், சேதநன்[2] இந்த இரு நெறிகளுள் ஒன்றை அநுட்டித்த பின்பே சர்வேசுவரன் அவனை ஏற்றுக் கொண்டு பலன் தருகின்றான் என்று உபநிடதமும் கூறுகின்றது. வினையிலே, கிடந்துழலும் சேதநனைப் பகவான் தேர்ந்தெடுப்பதற்குக் காரணம் அவன் மேற்கொள்ளும் நெறியேயாகும். பத்தி, பிரபத்தி ஆகிய இரண்டு நெறிகளில் ஒன்றைக் கடைப் பிடித்து ஒழுகுவதே சேதநனின் முத்திநெறியாகும்.

பத்தி நெறி: பேரன்பின் முதிர்ச்சியே பத்தி எனப்படும். இப்பத்தியினை மேற்கொண்டார் பத்தரெனப்படுவர். பத்தரெனினும் பித்தரெனினும் ஒன்றேயாகும் . உலகில் நோயால் கொள்ளும் பித்தும் மருளால் கொள்ளும் பித்தும் துன்பம் தருவன. அருளால் கொள்ளும் பித்து அளவிலா இன்பம் தருவது. “பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்” [3]என்னும் சுந்தரமூர்த்தியடிகளின் திருவாக்காலும் பத்தர்களின் மேம்பாட்டினை உணரலாகும். குலசேகரப் பெருமாளும் பேதைமா மணவாளன் தன் பித்தனே”[4] எம்பிரானுக்கு எழுமையும்

.


  1. 4. பிரபத்தி-சரணாகதி.
  2. 5. சேதநன்-அறிவுள்ள ஆன்மா
  3. 5. தேவாரம்-7.39:0
  4. 7. பெரு. திரு. 3:5