பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

அறிவியல் தமிழ்

தாழ்ந்தோர், கற்றவர் கல்லாதவர் என்ற வேறுபாடு இன்றி எல்லோராலும் மேற்கொள்ளக் கூடிய நெறியொன்றினைக் கண்டனர் மெய்யறிவு பெற்ற மேலோர். அதுவே ‘பிரபத்தி நெறி’ யாகும். இதனை வேதாந்ததேசிகர்,

“அந்தணர் அந்தியர் எல்லையில்
   நின்ற அனைத்துலகும்
நொந்தவ ரேமுத லாக
   நுடங்கி அனன்னியராய்

வந்தடை யும்வகை”[1]

[அந்தியர்-சண்டாளர்; நொந்தவர் (சமுசாரத்தில்) வருந்தியவர்; நுடங்கி-துவண்டுபோய்; அனன்னியர்-வேறு பலனையும் வேறு இரட்சகரையும் கொள்ளாதவர்; அடையும் வகை-சரணம் வழி,]

என்று சிறப்பித்துப் பேசுவர். இந்நெறி ‘சரணாகதி நெறி’ என்ற பெயராலும் வழங்கப்பெறும். எல்லோருக்கும், எளிதாகக் கடைப்பிடிக்கவல்ல இந்நெறியை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கின்றார் அந்த ஆசாரியர்.

“எல்லார்க்கும் எளிதான ஏற்றத் தாலும்
  இனிஉரைக்கை மிகையான இரக்கத்தாலும்
சொல்லார்க்கும் அளவாலும் அமைத லாலும்
  துணிவரிதாய்த் துணைதுறக்குஞ் சுகரத்தாலும்
கல்லார்க்குங் கற்றார்சொல் கவர்தலாலும்
  கண்ணன் உரை முடிசூடி முடித்த லாலும்
நல்வார்க்கும் தீயார்க்கும் இதுவே நன்றாம்

  நாரணற்கே அடைக்கலமாய் நணுகு வீரே.”[2]

[ஏற்றம்-பெருமை; உரைக்கை-உச்சரிக்கை; இரக்கம்-கருணை; சொல்-பிரபத்தி வாக்கியம்; ஆர்க்கும் அளவு]


  1. 16. தேசிகப் பிரபந்தம்-56
  2. 17 தேசிகப் பிரபந்தம்-200.