பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முதற்பொழிவு
1. அறிவியல் நோக்கில் தமிழ் இலக்கியம்

"ஆங்கொரு கல்லை வாயிலிற் படிஎன்(று)
அமைத்தனன் சிற்பி; மற்றொன்றை
ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்(று)
உயர்த்தினான்; உலகினோர் தாய்நீ!
யாங்கணே, எவரை, எங்ஙனம் சமைத்தற்(கு)
எண்ணமோ, அங்ஙனம் சமைப்பாய்;
ஈங்குனைச் சரண்என்று எய்தினேன்; என்னை
இருங்கலைப் புலவன்ஆக் குதியே.

"இடையின்றி அணுக்களெலாம் ஈழலுமென
இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்;
இடையின்றிக் கதிர்களெலாம் சுழலுமென
வானூலார் இயம்பு கின்றார்;
இடையின்றித் தொழில்புரிதல் உலகினிடைப்
பொருட்கெல்லாம் இயற்கை யாயின்
இடையின்றிக் கலைமகளே! நினதருளில்
எனதுள்ளம் இயங்கொ னாதோ?”[1]

-பாரதியார்

அன்பு நிறைந்த பேராசிரியப் பெருமக்களே! மாணவச் செல்வங்களே!

வணக்கம்.

இன்று, நிமிஷகவி திரு.கே.சுப்பைய நாயுடு அறக்கட்டளை சொற்பொழிவுத் திட்டத்தில் 1997ஆம் ஆண்டுக்குரிய சொற்பொழிவுகள் நிகழ்த்த உங்கள் முன் நிற்கின்றேன். இதனைநிறுவியவர் பேராசிரியர் டாக்டர், சங்கரராஜு நாயுடு


  1. பாரதியார் : பாஞ்சாலி சபதம், (இரண்டாம் பாகம்) - 205, 206