பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

 ஒரு கடிகாரத்தைச் சூரியனது அன்றாடப் போக்கிற்குச் சரியாகக் கணக்கிட்டு அமைத்தால் நாளடைவில் கடிகாரம் நடுப்பகலுக்கும் (12மணிக்கும்) சூரியன் உச்சிக்கு வரும் நடுப்பகலுக்கும் சிறிது வேறுபாடு ஏற்படும். சில பருவங்களில் சூரிய நடுப்பகல் பிந்தியும் சில பருவங்களில் முந்தியும் இருக்கும்.

கடிகாரம் ஒரே வேகத்தில் ஒடுவதும், ஆனால் சூரியனது தோற்றப் பயண வேகம் பருவ காலத்தையொட்டி மாறுபட்டு வருவதும் இதற்குக் காரணமாகும்.

இனி, செங்கதிரின் தோற்றப் பயண வேகம் மாறுபடுவதின் காரணங்களை ஆராய்வோம். உலகம் சுழலுவதால் சூரியன் மற்ற விண்மீன்களைப் போலவே கிழக்கிலிருந்து மேற்காக நகர்வதாகத் தோன்றுகிறது. இது தவிர, உலகம் ஓர் ஆண்டிற்கு ஒரு முறை சூரியனைச் சுற்றி வருவ தால், தோற்றத்தில் சூரியன் ஓர் ஆண்டில் விண்மீன்களினூடே மேற்கிலிருந்து கிழக்காகச் செல்வதாகத் தோன்றுகிறது. இப்போக்கில் சூரியன் செல்லும் பாதைக்குச் செங்கதிர் வீதி (“Ecliptic”) என்று பெயர். இது நில நடுக்கோட்டுக்கு நேராக இல்லாமல் 23½ சாய்வாக இருக்கிறது. மற்றும் செங்கதிர் வீதி நீள்வட்டமாக இருக்கிறது. இக்காரணங்களால் சூரியன் உலகுக்குச் சிறிது அருகில் வரும்போது சற்று விரைவு அதிகமாயும்,