பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடத்துச் சராசரி காலம் (Local mean time) என்பார்கள். இவ்வாறாக ஒரு நாட்டில் பல்வேறு இட நேரங்கள் இருக்கும் இடத்திற்கு இடம் நாட்டுக்கு நாடு வேறுபடும். இட நேரம் நாட்டின் நடைமுறைக்குப் பயன்படாது.

நாடு முழுவதுக்கும் ஒரே கடிகார நேரம் இன்றியமையாதது. ஒவ்வொரு நாடும் ஏதாவதொரு குறிப்பிட்ட தீர்க்க ரேகையைக் கொண்டு கணக்கிடும் காலத்தை நாட்டின் திட்டக் காலமாகப் (Standard t.) பயன்படுத்துகின்றது.

எடுத்துக்காட்டாக இந்தியாவில் 82½° கிரீனிச்சுத் தீர்க்க ரேகைக் காலம் இந்திய நாட்டின் திட்டக் காலம் (l. S. T.) ஆகும். இங்கிலாந்தில் கிரீனிச்சுத் தீர்க்கரேகைக் காலத்தைத் திட்டக்காலமாகக் கையாளுகின்றனர். ஒரு நாட்டின் பொது நடைமுறை நாள் (Civil day) என்பது அந் நாட்டின் திட்டக் காலப்படி ஒரு நள்ளிரவிலிருந்து மறு நள்ளிரவு வரையுள்ளதாகும்.

கப்பல் மணி

கடலில் சென்றுகொண்டிருக்கும் கப்பல் பல தீர்க்க ரேகைகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். அக்கப்பலின் கடிகார காலத்தைத் தீர்க்க ரேகைக்குத் தீர்க்க ரேகை மாற்றிக் கொண்டே போவது இயலாத ஒன்று. ஆகையால் வாணிகக் கப்பல்களிலும் பயணக் கப்பல்களிலும்