பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காலத்தை அளவிடல்

பண்டைக்காலத்திலிருந்தே மக்கள் பல்வேறு முறைகளைப் பயன்படுத்திக் காலத்தை அளவிட் டனர். ஞாயிறு தோன்றுவதும் மறைவதும் மாறிமாறி ஏற்படுவதைக் கண்டு தொல்பழங்கால மக்கள் ‘நாள்’ என்பதைக் குறித்தனர். திங்கள் (சந்திரன்) தேய்வதையும் வளர்வதையும் அடிப்படையாகக் கொண்டு நாளைவிட நீண்ட காலத்தைக் குறித்தனர்.

நிலத்தில் நேர்குத்தாகக் குச்சியை நட்டு, அதன் நிழலைக் கொண்டு காலத்தை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் அளவிட்டனர். இதை நிழற்கடிகாரம் (Gnomon) என்பர். இக்குச்சியின் நிழல் நீச அளவில் இருப்பது நண்பகலைக் காட்டும். நிழற்கடிகாரம் பகலில் மட்டுமே காலத்தை அளவிடப் பயன்படும். இரவிலும், காலத்தையளவிட மணற்கடிகாரம் (Sand glass or Hour glass) என்பதைக் கண்டுபிடித்தனர்.

ஞாயிற்றை எதிர்பாராமல், காலத்தை அளவிட மற்றுமொரு வழியை இந்தியத் தமிழகத்