பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றுதலில் மேற்கொள்ளும் சாதனங்கள்-11 - 163 .................TamilBOT (பேச்சு) 05:20, 10 பெப்ரவரி 2016 (UTC) ................സി.റ്-്. 1. ஆயத்தம் : வானுெலிப் பாடத்தில் இங்கிலே மிகவும் இன்றியமையாதது. முதலில் வானெலிப் பெட்டியை எல்லோரும் சிரமமின்றிக் கேட்கக்கூடிய இடத்தில் அமைக்கவேண்டும். இருக்கை வசதிகள் நல்ல முறையில் அமைந்திருத்தல் வேண்டும். பிற செயல்களுக்கு மாணுக்கர்களே ஆய த் தம் செய்தல்போலவே கேட்டலிலும் மானுக்கரின் மனங்லேயைப் பக்குவப்படுத்தி வைக்க வேண்டும். மானுக்கர்கள் கேட்கப்போகும் பொருளேப்பற்றிய ஒரு சில குறிப்புகளே முன்னரே விளக்கி அவர்கள் மனத்தைப் பக்குவப் படுத்தலாம் ; ஒரு சில கடினமான சொற்களையும் கலேச்சொற்களையும் விளக்கலாம். சிலசமயம் இதற்கென ஒரு பாடவேளையை ஒதுக்கி விளக்க வேண்டியும் நேரிடும் : பல்வேறு சோதனைகள், விளக்கப் படங்கள் முதலியவற்றைக் காட்டி விளக்கவும் நேரிடலாம். கல்வி ஒலிபரப்பு பற்றிய பொருள்களைத் திரட்டி அவை கிகழப்போகும் நாள், நேரம், பொருள்வரிசை, தலைப்புகள், அவைபற்றிய சிறு குறிப்புகள் முதலியவை அடங்கிய கையேடுகளே வானெலி கிலேயத்தார் எல்லாப் பள்ளிகளுக்கும் முன் கூட்டியே அனுப்பிவைப்பதால், ஆசிரியர் பேசப் பெறும் பொருள்களப்பற்றி முன்னதாக ஆயத்தம் செய்வதில் சிரமம் இராது. 2. செவிமடுத்தல் : இந்நிலையில் ஆசிரியர் வாளா இருக்க வேண்டியதுதான் வேண்டுமானல் ஒரு சில புதிய சொற்களையும், கலைச் சொற்களையும் கரும்பலகையில் எழுதலாம். கேட்கும் சூழ்கிலே நல்ல முறையில் அமைந்துள்ளதா என்பதை ஆசிரியர் கவனித்தல் வேண்டும். வகுப்பினுள்ளும் வகுப்பிற்கு வெளியிலும் கவனத்தைக் குறைக்கக்கூடிய இடையூறுகளே முன்னரே களைதல் வேண்டும். போதுமான ஒளி அமைத்தல், தேவையான காற்ருேட்டம், வானொலி யின் ஒலி அளவு, இருக்கை வசதிகள் முதலியவற்றில் ஆசிரியர் கவனம் செலுத்தினல் செவிமடுத்தல் சிறந்த முறையில் நடைபெறும். பேச்சைக் கேட்கும்பொழுது மாளுக்கர்கள் குறிப்புகள் எடுப்பதைப் பற்றிக் கருத்து வேறுபாடுகள் உள. பேசுவோரைப் பார்க்காத கிலேயில் குறிப்புகளே எடுப்பதால், கேட்கப்படும் பொருளில் தொடர்பு அற்றுப்போகலாம். 3, முடிவு : வானெலிப் பேச்சைக் கேட்ட பிறகு ஆசிரியர் பாடத் திற்கு மேற்கொள்ளும் முடிவு மிகவும் முக்கியமானது. இந்திலேபில் மூன்று நோக்கங்கள் உள: (அ) கேட்டவ ற்ை 座) இன்னும் விளக்கு தல் ; (ஆ) கேட்ட பொருளிலுள்ள இடைவெளிகளே நிரப்புதல் ; (இ) 3తర வற்றை விளக்க நேரிடுங்கால் புதிய சோதனைகளேயும், படவிளக்கங் களேயும் மேற்கொள்ளுதல் ஆகியவை. கேட்ட பொருளிலுள்ள இடை வெளிகளை நிரப்ப நேரிடுங்கால், விவிைடை மூலம் ஆராய்ந்து புதிதாகக் கற்பிக்கவேண்டிய பகுதிகளைச் சுட்டி, தகவல் நூல்கள், மேற்கோள்