பக்கம்:அறிவியல் வினா விடை-இயற்பியல்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

 42. தனி ஊசல் என்றால் என்ன?

முறுக்கற்ற மெல்லிய நூலில் பளுவாகத் தொங்கவிடப் பட்டிருக்கும் குண்டு.

43. தொங்குபுள்ளி என்றால் என்ன?

ஊசல் தொங்கவிடப்படும் புள்ளி. இது தக்கைக்கு அடியில் உள்ளது.

44. அலைவுப்புள்ளி என்றால் என்ன?

ஊசல் குண்டின் மையம்.

45. ஊசலின் நீளம் என்றால் என்ன?

தொங்குபுள்ளி, அலைவுப் புள்ளி ஆகிய இரண்டிற்கு மிடையிலுள்ள தொலைவு.

46. அலைவு என்றால் என்ன?

ஊசல் ஒரு திரும்பு புள்ளியிலிருந்து எதிர் திரும்பு புள்ளிக்குச் சென்று மீண்டும் அதே திரும்பு புள்ளிக்கு வரும் வரை ஏற்படுகின்ற அசைவு.

47. ஊசலின் அலைவு நேரம் என்றால் என்ன?

ஊசல் ஒர் அலைவுக்கு எடுத்துக் கொள்ளும் நேரம்.

48. அதிர்வு என்றால் என்ன?

அலைவில் பாதி அதிர்வு.

49. ஊசலின் சம அலைவு நேரம் என்றால் என்ன?

வீச்சு குறைந்தாலும் கூடினாலும் ஊசலின் அலைவு நேரம் மாறாது.

50. இந்த அடிப்படை எதில் உள்ளது?

ஊசல் கடிகாரங்களில் உள்ளது.

51. வினாடி ஊசல் என்றால் என்ன?

2 வினாடி அலைவு நேரமும் 100 செமீ. நீளமுமுள்ள ஊசல்.

52. ஈடு செய்த ஊசல் என்றால் என்ன?

சூழ்நிலையில் வெப்பம் ஏறினாலும் இறங்கினாலும் அதன் நீளம் மாறா ஊசல்.

53. தற்கால ஊசல்கள் எவ்வாறு ஈடு செய்யப்பட்டுள்ளன?

பொதுவான வெப்பநிலையில் நீள் பெருக்கம் அடையாத இன்வார் என்னும் உலோகக் கலவையால் செய்யப்படுகின்றன.