பக்கம்:அறிவியல் வினா விடை-இயற்பியல்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

 54. தனி ஊசலின் நீளத்திற்கும் அலைவு நேரத்திற்குமுள்ள தொடர்பு யாது?

தனி ஊசலின் நீளமும் அலைவு நேர வர்க்கமும் ஒன்றுக்கொன்று நேர் வீதத்திலிருக்கும் அல்லது l/= மாறா எண்.

55. நீர் இறைக்கும் உருளை எவ்வகை சார்ந்தது? அதன் எந்திர இலாபம் என்ன?

முதல் வகை. எந்திர இலாபம் 1.

56. காற்று எக்கியைப் புனைந்தவர் யார்?

1645இல் ஜெர்மன் இயற்பியலார் ஆட்டோ வான் கிரிக்.

57. தனி ஊசலை முதன்முதலில் ஆராய்ந்தவர் யார்? எவ்வாறு?

கலிலியோ தம் 17ஆம் வயதில் பைசா நகர ஆலயத்தில் ஆடிய ஒரு விளக்கின் இயக்கத்தைத் தம்முடைய நாடித்துடிப்பைக் கொண்டு அளந்தார்.

58. இலேமியின் தேற்றம் என்றால் என்ன?

ஒரு புள்ளியில் செயற்படும் மூன்று விசைகள் சமநிலையில் இருந்தால், ஒவ்வொரு விசையும் ஏனைய இரு விசைகளுக்கு இடையே உள்ள கோணத்தின் சைன் மதிப்பிற்கு நேர் வீதத்திலிருக்கும்.



4. காற்று வெளியும் வானிலையும்

1. காற்று என்றால் என்ன?

பல வளிகளின் கலவை.

2. காற்றுவெளி என்றால் என்ன?

புவியைச் சூழ்ந்துள்ள வளியடுக்கு. காற்று மண்டலம் என்றுங் கூறலாம்.

3. காற்று வெளியிலுள்ள அடுக்குகள் யாவை?

கீழ் வெளி, அடுக்கு வெளி, அயனி வெளி, மேல் வளி.

4. அயன வெளியின் சிறப்பு யாது?

மின் காந்த அலைகளை மறித்து வானொலிச் செலுத்துகை நடைபெற உதவுவது.