பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60.

61.

106

துறைகள் இதை ஊக்குவிப்பவை. ஒருபடித்தொகை என்றால் என்ன? வேறு பெயர்கள் வெளிக்கோட்டுத் தொகை, வளை கோட்டுத் தொகை குறிப்பிட்ட வழிவழியாக ஒரு சார்பைத் தொகைப்படுத்தல். இவ்வழி ஒரு நேர்க்கோட் டின் வட்டத் துண்டாகவும் இடவளை கோட்டின் பகுதியாகவும் பல வளைகோடுகள் சேர்ந்த வட்டத் துண்டுகளாகவும் இருக்கும். முடிவுறு தொகையீடு என்றால் என்ன? நீமன் தொகை. x : x, x, ஆகிய இரு குறிப்பிட்ட மதிப்புகளுக்கிடையே f(x) என்னும் ஒரு தனி மாறியின் சார்பைத் தொகையாக்குவதால் உண்டாகும் விளைவு.

10. அணியும் அணிக்கோவையும்

அணி என்றால் என்ன? ஒரு செவ்வக அடுக்கைத் தோற்றுவிக்க நிரல்களிலும் நிரைகளிலும் அமைக்கப்படும் அளவுத் தொகுதி பொதுக்குறியீடு இவற்றை அடைப்புக் குறிக்குள் அடக்குவது. அணிக்கோவை போன்று இதற்கு எண் மதிப்பு இல்லை. அளவுகளுக்கிடையே உறவுகளைக் குறிக்கப் பயன்படுவது.

அணியின் வகைகள் யாவை? 1. சேர்ப்பு அணி - சதுர அணி. 2. நிரலணி- தனிநிரல் கொண்டது. 3. மூலைவிட்ட அணி - ஒரு சதுர அணியே. 4. சமான அணி - வகையும் அணிவரிசையும் ஒன்று. அணிகள் பயன்படும் துறைள் யாவை? புள்ளியியல், பொருளியல், அணுஇயற்பியல். அணி குறித்த வரலாறு யாது? - ஆங்கிலக் கணிதமேதை ஆத கெயல் (1821-1895) 1858இல் அணிகளை அறிமுகப்படுத்தினார். இவர் நண்பர் ஜேம்ஸ் ஜோசப் சில்வஸ்டர் அணி என்னும் சொல்லைப் பயன்படுத் தினார்.