கணிதம்
1. கணிதத்துறைகள்1. கணிதத்தின் வரைவிலக்கணம் யாது?
கணிதம் ஒரு பகுத்தறியும் முறையாகும். இதனால் இயற்கையின் பல செயல்களும் விளக்கப்பட்டுக் குறிகள் மூலம் அறியப்படுகின்றன. பல அறிவியல்களையும் அவற்றின் சிக்கல்களையும் அறிய உதவும் சிறந்த கருவியாகும்; அது அறிவியல்களின் தாய்.
2. மெய்யறிவியல் (philosophy) என்றால் என்ன?
அறிவின் இயல்பையும் அது நிலைத்திருக்கும் தன்மையையும் ஆராயும் துறை. தத்துவம் என்று பொதுவாகச் சொல்லப்படுவது.
3. கணிதம் ஓர் அடிப்படை அறிவியல். எவ்வாறு இக் கூற்று பொருந்தும்?
எல்லா அறிவியல்களின் தாய் கணிதம். எந்த ஒரு துறைக்கும் அதன் அறிவு மிக இன்றியமையாதது. நெறி முறைகளையும் சமன்பாடுகளையும் வகுத்துத் தருவது. இக்காலத்தில் கணக்கு எல்லாத் துறைகளுக்கும் தேவைப் படுகிறது.
4. கணிதம் ஒரு சுருக்கெழுத்துக் குறிகளின் தொகுதி என்றால், அதன் எண்ணுருக்கள் யாவை?
எண்களும் நெடுங்கணக்கு எழுத்துகளும் குறிகளும் அளவுகளைத் தெரிவிப்பவை. பல செயல்கள் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன என்பதைக் குறிகள் காட்டுபவை.
5. கணிதத்தின் இயல்பு யாது?
கணிதம் ஒரு கருவி மட்டுமன்று. துல்லிய அறிவுத் துறையும் ஆகும். அது அளவுகள் பற்றியும் அவற்றிற்கு