பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67.

68.

119

எல்லாப் புள்ளிகளும் கணத்தின் உறுப்புகளாகும். புள்ளிகளின் இயங்குவரை என்றால் என்ன? ஆயங்களுடன் தொடர்புடைய சமன்பாட்டால் வரை யறை செய்யப்படும் புள்ளிகளின் கணம். புலம் என்பது என்ன? 1. சுழியைத் தவிர மற்றொரு எண்ணோடு கூட்டல், பெருக்கல், கழித்தல், வகுத்தல் ஆகிய செயல்களுக்கு உட்படும் எண்களின் கணம். இதனால் ஒவ்வொரு உறுப்பும் ஒரே கனத்தைச் சார்ந்ததாக இருக்கும். எ-டு. வீதமுறு எண்களின் கணம் புலத்தைத் தோற்றுவிப்பது. பொதுவாகப் புலம் என்பது கூட்டல், பெருக்கல் ஆகிய இரு செயல்களைக் கொண்ட முழுமைக் கணமாகும். 2. காந்தப்புலம், ஈர்ப்புப்புலம்: விசையுள்ளது.

12. மாறி மடக்கை திசைச்சாரி

() மாறி

மாறி என்றால் என்ன? மாறும் அளவு. வழக்கமாக, இயற்கை கணக்குச் சமன்பாடுகளில் x,y என்னும் எழுத்தால் குறிக்கப்படும். மாறியின் வகைகள் யாவை? 1. சமவாய்ப்பு மாறி. 2. தனித்த சமவாய்ப்பு மாறி. 3. தொடர் சமவாய்ப்பு மாறி 4. தொகைமாறி.5. சாராமாறி. 6. திசைச்சாரிமாறி. 7. அணிமாறி. இருமாறு என்றால் என்ன? இருமாறி அளவுகளைக் கொண்டுள்ளது. எ-டு. தளத் திசைச்சாரி இருமாறி. ஏனெனில், அதற்கு அளவும் திசையும் உண்டு.

அளவுவரிசை என்றால் என்ன? ஒரு மாறியின் அளவு அல்லது சிறப்பிற்கேற்பப் பொருள் களை அளப்பதன்மூலம் அப்பொருள் கணத்தை