51.
52.
53.
54.
55.
127
திசையிலிப் பெருக்கற்பலன் என்றால் என்ன? இரு திசையிலிகளைப் பெருக்க ஒரு திசையிலி கிடைக்கும். AB = AB Cos 6 என்பதனால் வரையறை செய்யப்படுவது. மும்மைத் தொகையீடு என்றால் என்ன? மூன்று தடவைகள் ஒரே சார்பைத் தொகையாக்குவதால் கிடைக்கும் பலன்.
fff'(x,y,z) dzdydx. மும்மைப் பெருக்கற்பலன் என்றால் என்ன? மூன்று திசைச்சாரிகளின் பெருக்கற்பலன். மும்மைத் திசையிலி என்றால் என்ன? மூன்று திசைச்சாரிகளின் (திசையுளிகளின்) பெருக்கற் பலன். இதன் பலன் ஒரு திசையிலி. - மும்மைத் திசையுளிப் பெருக்கற்பலன் என்றால் என்ன? மூன்று திசைச்சாரிகளின் பெருக்கற்பலன். இதன் பலன் ஒரு திசைச்சாரி ஆகும். இருதிசைச்சாரிகளின் ஒரு திசைச்சாரிப் பெருக்கற்பலன் அது. அவ்விரண்டில் ஒன்று திசைச்சாரிப் பெருக்கற்பலன் ஆகும். அதாவது, Ax(BXC) = (AC) B- (B.C)A
அதேபோல்
(AXB) XC) = (AC) B - (B.C)A. A,B,C ஆகிய மூன்றும் பரிமாற்றுமுறையில் செங்குத்தாக இருக்குமாறு அமையுமானால், அவை சமமாக இருக்கும்.
13. குலம்
குலம் என்றால் என்ன? ஒருங்குசேர்ந்ததும் செயலைக் கொண்டதுமான கணம். குலத்தின் வகைகள் யாவை? 1. பரிமாற்றுக்குலம் அபிலியன் குலம். 2. ஆழிகுலம் 3. முடிவுறுகுலம். 4. முடிவுறாக்குலம். குலக்கொள்கை வரலாறு யாது?