பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

1. கணக்கு:சமன்பாடுகளின் மூலக் கொள்கை. 2. வேதி இயல் : மூலக்கூறுகளின் சமச்சீர்களை விளக்கப் பயன்படுவது. இதனால் அவற்றின் ஆற்றல் மட்டங்களை உறுதி செய்யலாம். அவற்றின் நிறமாலைகளை விளக்கலாம். 3. இயற்பியல் : சிப்ப எண்களின் அடிப்படையில் சில அடிப்படைத் துகள்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒமேகா - குறை துகளைக் குலத்தின் நீங்கிய உறுப்பாகக் காணலாம். 4.மொழி இயல்: இத்துறையிலும் பயன்படுவது. 5. பிற துறைகள் : சிப்ப விசையியல், பொதுச் சார்புக் கொள்கை, படிக வரைவியல், துகள் இயற்பியல், வேதி இயல், உயிரியல்.

14. பரவலும் ஆயங்களும்

() பரவல்

பரவல் என்றால் என்ன? ஒரு மதிப்பின் மூலம் உற்றுநோக்கல்களை இடைவெளி களாகப் பிரித்தல். கணித வாய்பாட்டிற்குரிய பொதுச் சொல். வரம்பற்ற மாறிகளின் மதிப்புகள் தொடர்பாக நிகழ்தகவுகளை இவ்வாய்பாடுகள் அளிப்பவை. பரவலின் வகைகள் யாவை? 1. தனித்த பரவல். 2. தொடர் பரவல். 3. ஈருறுப்புப் பரவல். இயல்நிலைப் பரவல் என்றால் என்ன? பரவலின் ஒரு வகை. ஒரு புள்ளி இயல் பரவல் N(a,0) என்று எழுதப்படுவது. இப்பரவலின் பண்புகள் யாவை? 1. இதன் வளைவரையானது கூட்டுச் சராசரி மதிப்பின் இரு பக்கத்திலும் சமச்சீராக இருக்கும்.