பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10.

11.

12.

131

2. இதற்கு ஒரே ஒரு முகடு மட்டும் உண்டு. 3. கூட்டுச் சராசரி = இடைநிலை = முகடு = ! 4. அடிக்கோடு இதன் அணுகுத் தொடுகோடாகும். கைவர்க்கப்பரவல் என்றால் என்ன? x பரவல். திட்ட இயல் பரவலுள்ள சமவாய்ப்பு மாறிகளின் கூட்டுத் தொகைப் பரவல். கைவர்க்க ஆய்வு என்றால் என்ன? எந்த அளவுக்கு அறிமுறை நிகழ்தகவுப் பரவல், ஒரு தகவல் கணத்தில் பொருந்துகிறது என்பதற்குரிய அளவு. பெருக்குப் பரவல் என்றால் என்ன? பயனுள்ள விளைவு கிடைக்குமுன், தனித்த பர்னவுலி முயற்சிகளின் பரவல். எ-டு. தலை வருவதற்கு முன் ஒரு நாணயத்தைப் பல தடவைகள் உருட்டுதல். பெருக்குச் சார்பு என்றால் என்ன? வெற்றியுள்ள முடிவு கிடைக்குமுன், தனித்த பர்னவுலி முயற்சிகள் பல பரவி இருத்தல். எ-டு. தலை விழுவதற்கு முன் ஒரு நாணயத்தைப் பல தடவைகள் சுண்டுதல். வீச்சு (ரேஞ் என்றால் என்ன? ஒரு பரவலின் மீப்பெருமதிப்பிற்கும் மீச்சிறு மதிப்பிற்கும் உள்ள வேறுபாடு. எ-டு ஐந்து மாணவர் எடைகள் (கி.கி) 45, 47, 43, 50, 54. வீச்சு = 54 - 43 = 11 கி.கி.

இதன் பயன்கள் யாவை? 1. பொருள்களின் தரக் கட்டுப்பாட்டு ஆய்வுகளில் பயன் படுவது. 2. பங்குகளில் விலை நிலவரங்கள், வட்டி வீதங்கள், பருவ நிலை முன்னறிவிப்புகள், வெப்பநிலை வேறுபாடு முதலியவற்றை அறிய உதவுதல். தொடக்கப்புள்ளி என்றால் என்ன? ஆதிபுள்ளி. ஒர் ஆயத் தொகுதியில் நிலையான பார்வைப் புள்ளி. இதில் எல்லா ஆயங்களின் மதிப்பு களும் 0. இவற்றில் ஆயங்கள் சந்திக்கும். புள்ளி என்றால் என்ன?