பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


ஒன்பது வரை (0-9) ஆகும். பத்தாவது எண்ணிக்கையைக் குறிக்க ஒன்றுடன் சுழியைச் சேர்த்தனர் (10). இதனால் தசம முறை உருவாயிற்று. உரோமர்கள் எண்முறை திறம் வாய்ந்தவை அல்ல. சிக்கலானவை. I, W, X, L, C, M இவற்றிலிருந்து உரிய முறையில் சேர்த்து எல்லா எண்களையும் பெறலாம். எ-டு. VI,XII. ஆனால், அவை சிக்கலைத் தீர்ப்பதற்கோ கணக்கிடுவதற்கோ பயன்படவில்லை.
14.வடிவகணிதம் என்றால் என்ன?
கணிதத்தின் வரைவடிவப் பிரிவு. நீள அளவீடுகள் கோணங்களுக்கிடையே உள்ள அளவீடுகள் பற்றி அது ஆராய்வது.
15.வடிவகணித வகைகள் யாவை?
1. தள வடிவ கணிதம் - இது இரு பருமன்களிலுள்ள தட்டை உருவங்களை ஆராய்வது.
2.கன வடிவ கணிதம்-இது முப்பருமன்களில் உள்ளதை மொத்தமாக ஆராய்வது.
3. பகுப்பு வடிவியல்.
4. யூக்ளிட் வடிவியல்.
5. யூக்ளிட் சாரா வடிவியல்.
6. முடிவுறு வடிவியல்.
7. செய்முறை வடிவியல்.
8. அறிமுறை வடிவியல்.
16.பகுப்பு வடிவ கணிதம் என்றால் என்ன?
ஆயத் தொலை வடிவ கணிதம். இதில் இயற்கணித முறைகளும் ஆயத் தொலை அமைப்பு முறைகளும் பயன்படுகின்றன.
17.வடிவ கணிதத்தின் சிறப்பென்ன? எல்லாப் பொறிஇயல் வடிவமைப்பின் அடிப்படை அது. வரைகலையின் அடிப்படையுமாகும் அது.
18.வடிவியலின் வரலாறு யாது?
மனிதன் நிலத்தை அளக்கத் தொடங்கியதிலிருந்து தோன்றியது. இது எல்லா நாகரிகங்களுக்குமுரியது.