பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11.

12.

13.

14.

15.

140

முந்திய அடுக்கிலுள்ளதை விட மிக நீளமான புள்ளி யைக் கூடுதல் வரிசை கொண்டிருக்கும். n ஆவது முக்கோண எண் n (n+1)/2. முக்கோணத் தீர்வை விளக்குக. கொடுக்கப்பட்டுள்ள தகவல் படி முக்கோணங்களைப் பின்வருமாறு பயன்படுத்தலாம். 1. மூன்று பக்கங்கள் SSS. 2. ஒரு பக்கம் இரண்டு கோணங்கள் SAA 3. இரு பக்கங்களும் சேர்க்கப்பட்ட கோணமும் SAS. 4. இரு பக்கங்களும் அவற்றின் ஒன்றிற்கு எதிராகவுள்ள கோணமும் SSA 5. இரு கோணங்கள் தெரியுமானால், மூன்றாவது கோணத்தை எளிதாகக் கணக்கிடலாம். 6. ஒரு முக்கோணத்தின் முன்று தனி உறுப்புகள் தெரியுமானால், எஞ்சியவற்றை நாம் கணக்கிட இயலும். இத்தொகை அறுதிப்பாடே ஒரு முக்கோணத்தின் தீர்வு என்பது.

செம்பக்கம் (கர்ணம்) என்றால் என்ன? செங்கோண முக்கோணத்தில் செங்கோணத்திற்கு எதிரி லுள்ள பக்கம். மற்றப் பக்கங்களின் நீளத்திற்குள்ள செம் பக்க நீளவீதங்கள், கோணங்களின் கோசைன் சார்பு களையும் சைன் சார்புகளையும் வரையறுக்க முக்கோன அளவியலில் பயன்படுகின்றன. பொதுமையம் என்றால் என்ன? ஒரே மையத்தைக் கொண்ட கோளங்கள் அல்லது வட்டங்களைக் குறிப்பது. எ-டு உள்ளீடற்ற கோளத்திற்கு இரு பொதுமையக் கோளப் பரப்புகள் உண்டு. குத்துக்கோடு என்றால் என்ன? ஒரு முக்கோணத்தின் ஒர் உச்சியிலிருந்து அதன் எதிர்ப் பக்கத்திற்கு வரையப்படும் செங்குத்துக்கோடு. ஒரு முக்கோணத்தில் 3 குத்துக்கோடுகள் உண்டு. அனைத்துச் சமம் என்றால் என்ன? அளவு, வடிவம் ஆகியவற்றில் இரண்டிற்கு மேற்பட்ட