பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

இதை ஒட்டி வான நூல் போன்ற பிற துறைகளும் தோன்றின. இந்திய நாகரிகம் குறிப்பாகத் திராவிட நாகரிகம், வடிவியல் அறிவு நிரம்பப் பெற்றிருந்தது. பிரம்ம குப்தர், ஆரியபட்டர் முதலிய கணித மேதைகள் வடிவியல் குறித்து நூல்கள் எழுதியுள்ளனர். 
19.யூக்ளிட் வடிவ கணிதம் என்றால் என்ன?
கணிதத்தில் ஒரு வகை. கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க கணக்கறிஞர் யூக்ளிட் தம் மூலங்கள் என்னும் நூலில் விளக்கியது. இது பல வரையறைகளின் அடிப்படையில் அமைந்தது: புள்ளி, கோடு, உய்மானங்கள். இவை வெளிப்படை உண்மைகளே. எ-டு. பகுதியை விடத் தொகுதி பெரிது. வடிவகணிதப் பண்புகள் பற்றி எடுகோள்களும் கூறியுள்ளார். எ-டு. இரு புள்ளிகளால் ஒரு நேர்க்கோடு உறுதி செய்யப்படுகிறது. இந்த அடிப்படைக் கருத்துகளைப் பயன்படுத்தும் பல தேற்றங்களையும் இவர் மெய்ப்பித்துள்ளார். இதற்கு முறைசார் விதி வருவித்தல் முறையைப் பயன்படுத்தினார். இவர்தம் அடிப்படை உய்மானங்கள் மாற்றியமைக்கப் பட்டுள்ளன. தூய வடிவ கணிதத்தில் இம்முறை இன்றும் பயன்படுகின்றன.
ஓர் இன்றியமையா எடுகோள் ஒரு போக்கு எடுகோள் ஆகும். இதன் தற்கால வடிவம் இதுவே. நேர்க்கோட்டுக்கு வெளியில் ஒரு புள்ளி அமையும் பொழுது, ஒரு நேர்க்கோடு அப்பொழுது வரைய இயலும். இது மற்றக் கோட்டுக்கு ஒருபோக்காக இருக்கும்.
20.யூக்ளிட் செய்முறைப்பாடு என்றால் என்ன?
இரு நேர்க்குறி முழுஎண்களின் மீப்பெருப் பொதுக் காரணியைக் காணும் முறை.
21.இதை ஒர் எடுத்துக்காட்டால் விளக்குக
54,930 ஆகிய இரு எண்களை எடுத்துக் கொள்க. 930ஐ 54 ஆல் வகுக்க ஈவு 17 மீதி 12, 54ஐ 12 ஆல் வகு. ஈவு 4 மீதி 6.12ஐ 6 ஆல் வகு. ஈவு 2. மீதி 0. ஆக 54,930 ஆகியவற்றின் மீப்பெருப் பொதுக் காரணி 6.