பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10.

11.

12.

13.

14.

15.

16.

17.

160

சூதாட்டத்திலிருந்து நிகழ்தகவுக் கொள்கை உருவாகக் காரணமாக இருந்தவர்கள் யார்? 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாஸ்கல், பர்மட் நிகழ்தகவுக் கொள்கைக்கு மூன்று வெளிப்படை உண்மை களை அளித்தவர் யார்? உருசிய கணித மேதை கால்மோசிரோவ். நிகழ்ச்சி என்றால் என்ன? 1. ஒரு பகடையை வீசும்பொழுது, ஒற்றைப்படை எண் கிடைப்பது நிகழ்ச்சியாகும். 1,3,5 என்னும் எண்களில் ஏதேனும் கிடைத்தால் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று பொருள். - 2. கூறுவெளியின் உட்கணமே நிகழ்ச்சி. வெற்றுக்கணம் நடக்க இயலாத நிகழ்ச்சி. S என்பது நடக்கக்கூடிய நிகழ்ச்சி. நிகழ்வெண் வரைபடங்கள் என்றால் என்ன? வேறுபட்ட இடங்களுக்கும் வேறுபட்ட காலங்களுக்கு முரிய தகவல்களை விரைவாகவும் துல்லியமாகவும் ஒப்பிட இவை பெரிதும் உதவுபவை. நிகழ்வெண் அட்டவணை என்றால் என்ன? ஒரு மாதிரியில் முடிவின் ஒவ்வொரு வகையும் எவ்வாறு தோன்றுகிறது என்பதைக் காட்டும் பட்டியல், எ-டு. ஒரு நிறுவனத்தில் 100 தொழிலாளர்கள் பெறும் வாரச் சம்பளம் ஒவ்வொரு வீச்சிலும் எண்ணாகக் காட்டப் படுவது.

தகவல் கொள்கை என்றால் என்ன? நிகழ்தகவுக் கொள்கையின் பிரிவு. உறுதியின்மை, துல்லியம், செய்திச் செலுத்துகையின் செய்தியடக்கம் முதலியவற்றை ஆராய்வது. கணித எதிர்பார்ப்பு என்றால் என்ன? நிகழ்தகவுப் பரவலின் சராசரியை எதிர்பார்ப்பு அல்லது சமவாய்ப்பு மாறியின் எதிர்பார்ப்பு மதிப்பு எனக் கூறலாம். விளையாட்டுக் கொள்கை என்றால் என்ன? விளையாட்டுகளில் ஒவ்வொரு விளைபயனின் நிகழ்தகவு