பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18.

19.

20.

21.

22.

161

களின் கணித ஆய்வு. யார் வெற்றி பெறுவார் என்பதில் வாய்ப்புக்கூறு இருப்பினும், குறிப்பிட்ட விளைபயன் வாய்ப்புகளைப் பெருமமாக்கப் பொதுவிதிகள் உள்ளன. புள்ளிவிவர நுணுக்கங்களைப் பயன்படுத்தி, விளையாட் டாளர் எண்ணிக்கை, விளையாட்டு விதிகள் ஆகியவற் றிலிருந்து இவற்றைக் கணக்கிட இயலும். கணிதத்திற்கும்விளையாட்டிற்குமுள்ள தொடர்பென்ன? நிகழ்தகவுக் கொள்கை வழியாக இத்தொடர்பு ஏற்படுகிறது. இத்தொடர்பை ஆராய்ந்து கூறியவர் யார்? பக்டர் ஜான்வன் நியூமன். அமெரிக்கப் பிரின்ஸ்டன் உயராய்வு நிறுவனத்தில் பணியாற்றி இயற்கை எய்தியவர் இவர். இவர் ஆய்வுகள் பற்றிக் கூறுக. இவர் பல ஆண்டுகள் உழைத்து விளையாட்டைக் கணித வாய்பாடுகளாக மாற்றினார். இவ்வாய்பாடுகள் தெரி விப்பவை: வெற்றி பெறும் நிகழ்தகவுகளைத் துல்லிய மானதும் சிக்கலானதுமான உறுப்புகளில் கூறலாம். முழு விளையாட்டுத் தொழிலும் காப்பு அடிப்படையில் அமைவதே. ஒரு விளையாட்டாளர் பெருமளவுக்கு வெற்றி பெறலாம். அதை நன்கு பயன்படுத்தவும் செய்யலாம். கணித விளையாட்டுகளின் நன்மைகள் யாவை? இவை வெறும் பொழுதுபோக்கல்ல. இவற்றிலிருந்து நாகரிகத்திற்குரிய பல அருங்கருவிகள் நமக்குக் கிடைத்துளளன. அவை தொலைபேசி, தொலைக்காட்சி, கணினி, வானவெளிக்கலங்கள் முதலியவை ஆகும். விளையாட்டுகள் போலவே பல புனைவுகள் வெற்றி பெறுகின்றன. ஏனெனில், பொதுமக்கள் நன்மைக்காக வாய்ப்பு இக்கொள்கை மூலம் நன்கு பயன்படுத்தப் படுகிறது.

மார்க்கவ் தொடர் என்றால் என்ன? தனித்த சமவாய்ப்பு நிகழ்ச்சிகள் அல்லது மாறிகளின் தொடர்வரிசை.

é- 11.