பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 18. தேற்றங்கள்

தேற்றம் என்றால் என்ன? நிறுவப்பட்ட கூற்று. எ-டு. பித்தகோரஸ் தேற்றம். கிளைத்தேற்றம் என்றால் என்ன? தேற்றத்தின் ஒரு பிரிவு. ஒரு வட்டத்தின் ஒரு நாணின் மையக்குத்துக்கோடு, வட்ட மையம் வழியே செல்லும். இலாக்ராஞ்சி தேற்றத்தைக் கூறுக. H என்பது G என்னும் ஒரு முடிவுள்ள குலத்தின் உட்குலம் என்றால் Hஇன் வரிசை Gஇன் வரிசையை மீதியின்றி வகுக்கும். காரணித்தேற்றம் என்றால் என்ன? f(a) = 0 ஆக மட்டும் இருக்கும்பொழுது, x என்னும் மாறியில், x-a என்பது f(x) என்னும் பல்லுறுப்புக் கோவையில் காரணி என்னும் நிலைமை. இலய்பினிட்ஸ் தேற்றத்தைக் கூறுக. இரு சார்புகளின் பெருக்கற்பலனின் n ஆவது வகைக்கெழுவைக் காணப் பயன்படும் வாய்பாடு. f(x) = u (x) v (x) என்னும் சார்பில் K தொடர்பாகவுள்ள nஆவது வகைக்கெழு D (uv) = d (uv) dx) என்று எழுதப்பெறுவது. எண்கோள் என்றால் என்ன? இது ஒரு தேற்றம். முன்னரே நிறுவப்பட்டு வேறு ஒரு மெய்ப்பில் அடிப்படை உய்மானமாகப் பயன்படுவது. பிளிஸ் தேற்றத்தைக் கூறுக. இது நுண்கணிதத் தேற்றம் ஆகும். ஒரு தொடரின் எல்லைக்கு இரு சார்புகளின் பெருக்கற்பலனின் வரையறையுள்ள தொகையைத் தொடர்புபடுத்துவது. a = x3 b என்னும் இடைவெளியில் f(x), g(x) ஆகியவை தொடர்சார்புகளாக இருந்து,

x, A இன்

Kஇன் உள்இடைவெளியில் இடைவெளி பிரிக்கப்படு மானால், x, x என்னும் எவ்விரு புள்ளிகளும் தேர்ந்