பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

இது ஒர் உயர்நிலைக் கணிதமாகும். இது வரையறை செய்யப்பட்ட தோராய முறைகளைப் பயன்படுத்துவது. இதைக் கொண்டு மாறிகளுக்கிடையே உள்ள சிக்கலான தொடர்களுக்குரிய தீர்வுகளைக் காணலாம்.
31.நுண்கணிதத்தின் சிறப்பென்ன?
இக்காலப் பொறி இயல், இயற்பியல் ஆகிய துறைகளில் பயன்படும் எல்லாக் கணிதச் செயல்களின் மிக இன்றியமையாத அடிப்படை தொழில்நுட்பப் பணியா ளர்களின் மொழியாகும் அது. முதலாண்டுக் கல்லூரி மாணவனாக இருந்தாலும் பேரறிஞர் ஐன்ஸ்டீனாக இருந்தாலும் இம்மொழி அவர்களுக்குத் தேவை. எந்திர வழிக் கணக்கிடுதலிலும் (கணினி) இது மிக இன்றி யமையாதது.
32.இதன் அடிப்படை யாது?
மெய்யெண்கள், சார்புகள் ஆகியவற்றின் பண்புகள் பற்றிய கருத்தே இதன் அடிப்படை சார்பு என்னுங் கருத்து கணிதத்திலுள்ள மிகச் சிறந்த கருத்துகளில் ஒன்று. இலய்பினிட்ஸ் முதன் முதலில் சார்பு என்னும் சொல்லைப் பயன்படுத்தினார்.
33.நுண் கணித வகைகள் யாவை?
1. வகை நுண்கணிதம். 2. தொகை நுண்கணிதம்.
34.வகை நுண்கணிதம் எதைப் பற்றி ஆராய்கிறது?
ஒரு சமன்பாட்டின் உறுப்புகளை மிகச் சிறிய அளவுக்குக் குறைப்பதால், ஒரு மாறி மற்றொரு மாறித் தொடர்பாக உள்ள பொழுது அமையும் மாற்ற வீதத்தைக் கான இயலும். ஒரு பொருளின் முடுக்கத்தைக் காணப் பயன்படுவது.
35.தொகை நுண் கணிதம் ஆராய்வது எது?
இது ஒரு படி மேற்செல்கிறது. பல மிகச் சிறிய அளவு களை இது தொகைப்படுத்துவது. இதன் இறுதிக் கூடுதல் பல தொல்லைதரும் சிக்கல்களைத் தீர்ப்பது. காட்டாக, ஒர் ஒழுங்கற்ற உருவத்தின் பரப்பைக் காணலாம்.
36.நுண்கணிதத்தை யார் எப்போது புனைந்தார்கள்?