பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

பெறல், பகுப்பின் அடிப்படையில் முடிவு காணச் செய்தல் ஆகியவை பற்றியது. இதன் உய்மானத்தில் மாதிரிப் பகுப்பிலிருந்து மக்கள் தொகை பற்றிய முடிவுகள் உய்மானமாகக் கொள்ளப்படுகின்றன. வண்ணனைப் புள்ளியியலில் தகவல் தொகுக்கப்படும் உய்மானமில்லை.
43. இட வடிவியல் என்றால் என்ன?
இடவடிவப் பண்புகளை ஆராய்வது.
44. மட்டுக் கணிதம் என்றால் என்ன?
மட்டுகளை ஆராய்வது.
45.நிகழ்தகவு என்றால் என்ன?
ஒரு நிகழ்ச்சி ஏற்படுவதற்குரிய வாய்ப்பை ஆராய்வது.
46.கணிதத்தின் தாக்கம் யாது?
20ஆம் நூற்றாண்டில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியலில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கணக்கு வளர்ச்சியாலேயே ஆகும். தொகையீட்டு வகை நுண்கணிதம் என்னும் கணிதப் பிரிவு இயற்பியல், வேதியியல், உயிரியல், பொறிஇயல், வானியல், புவி வளரியல், வானவெளி அறிவியல் முதலிய துறைகளில் உருவான பல சிக்கல்களைத் தீர்க்க ஆற்றல் வாய்ந்த கருவியாக உள்ளது. அண்மைக் காலத்தில் கணிதம் சமூக அறிவியல்களிலும் பெருத்த முன்னேற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது.
47. கணிதமும் தர்க்கமும் எவ்வாறு தொடர்புடையவை?
கணக்கு தருக்க அடிப்படையில் அமைந்தது. பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்ட கூற்றுகளைக் கொண்டு முடிவுகள் செய்து, கணக்கு முறைகளை கணித மேதைகள் உருவாக்கினர்.
48.கணிதமும் அதனோடு தொடர்புடைய துறைகளும் யாவை?
தந்தை அறிவியல் மெய்யறிவியல். தாய் அறிவியல் கணக்கு இவ்விரண்டின் வழிவந்தவையே ஏனைய எல்லா அறிவியல்களும். அவ்வகையில் கணிதத்தோடு தொடர்புடைய துறைகளாவன:


1. வானியல். 2. இயற்பியல். 3. வேதிஇயல்

&4 2.