பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

4. புள்ளி இயல். 5. தொழில்நுட்பவியல்-வானவெளி அறிவியல். அடிப்படைக் கணிதம், பயன்படு கணிதம் ஆகிய இரண்டும் இன்று ஆதிக்கம் செலுத்தாத துறைகள் இல்லை எனலாம்.கொள்கையளவில் மெய்யறிவியலோடும் தர்க்கத்தோடும் கணிதம் தொடர்புடையது.
49. கணிதத் தொகுத்தறிதல் என்றால் என்ன?
தனித்தனி விபரங்களிலிருந்து குறிப்பிட்ட ஒரு பொது விதியைக் கண்டுபிடிக்கும் முறை. இதன் முடிவு உண்மை யாகவோ பொய்யாகவோ இருக்கலாம். எ.டு. 135, 245, 1320 என்னும் எண்கள்.5ஆல் வகுக்கப்படும் எண்களாகும்.
50. கணிதத் தொகுத்தறிதல் வரலாறு யாது?
இப்பெயரை அகஸ்டல் டிமார்கன் (1809-1871) என்னும் ஆங்கிலக் கணக்கு மேதை முதன்முதலில் தம் தொகுப்பறி கணிதம் என்னும் கட்டுரையில் 1838இல் அறிமுகப் படுத்தினர். கணிதத் தொகுத்தறி விதிக்கு முன்ன்ோடி இத்தாலிய கணிதமேதை பிரான்ஸ் செங்கோமெராலிகல் (1494 -1575) என்பவராவார். இந்தியக் கணிதமேதை பாஸ்கரர் (கி.பி.1153) என்பவர் இம்முறையை தம் படைப்புகளில் பயன்படுத்தினார்.
51. கணித வேலை வாய்ப்புகள் யாவை?
வணிகம், கல்வி, அரசு, தொழில் முதலிய துறைகளில் கணிதத்திற்கு நிறைய வாய்ப்புள்ளன.
1. கல்வி நிலையங்களில் கணித ஆசிரியராகவும் பேராசிரி யராகவும் பணியாற்றலாம்.
2. ஆற்றல் தகவல் தொடர்பு உற்பத்தி, போக்குவரத்து முதலிய துறைகளில் ஆராய்ச்சியாளராக இருக்கலாம்.
3. நிறுவனங்களில் கணக்கராக இருக்கலாம்.
4. தொழிற்சாலைகளில் சிக்கல்களைத் தீர்க்கும் அலுவலராக இருக்கலாம்.
5. கணிப்பொறித் தொழில் நிகழ்நிரல் வரைபவராக இருக்கலாம்.
6. வாழ்நாள் காப்பீட்டுக் கழகத்தில் புள்ளியியல் அலுவலராக இருக்கலாம்.
7. வான வெளிப் பயணங்களைத் திட்டமிடவும், போர்த்