பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19


துறைத் தேவைகளைப் பகுத்தறியவும் கணக்கியலார் பணி தேவைப்படுகிறது.

52. அன்றாட வாழ்வில் கணிதம் எவ்வாறு பயன்படுகிறது?
1. கூட்டல், கழித்தல் அதிகமாகப் பயன்படுகின்றன.
2. கணிப்பொறி அறிவியலின் பிரிக்க இயலாத பகுதி.
3. தொழில்துறையில் உற்பத்திப் பொருள்களை வடிவமைக்கவும் உருவாக்கவும் ஆய்ந்து பார்க்கவும் பயன்படுகிறது.
4. பொறிஇயலில் பாலங்கள், கட்டடங்கள் கட்டப் பயன்படுவது.
5. வணிகத்தில் வாங்குவதிலும், விற்பதிலும் பயன்படுவது.

53. கணிதத்தின் கருத்துச் சிறப்பென்ன?
இயற்பியல் எண்ணத்திற்கு அது ஒரு சரியான வழிகாட்டி அதற்கு ஆசான் தர்க்கமும் இசைவுத் திறனுமே.

54. இடம் மற்றும் கால ஒற்றுமைக்குக் கணிதத்தில் சிறந்த எடுத்துக்காட்டு எது?
ஐன்ஸ்டீன் சிறப்புச் சார்புக் கொள்கை.

55. இதன் சிறப்பென்ன?
20ஆம் நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்பு. நிறை ஆற்றல் சமன்பாட்டிற்கும் இறுதியாக அணு ஆற்றலை அறியவும் வழிவகுத்தது.

56. கணிதம் தொழில் துறைக்கு எவ்வாறு உதவும்?
பகுதி வகைச் சமன்பாடு முறை என்பதை அமெரிக்கக் கணித அறிஞர்களான மால்கம் புளோர், மைக் வில்சன் ஆகிய இருவரும் உருவாக்கியுள்ளனர் (8-6-2000, The Hindu). இது கணிப்பொறி வழி அமையும் வடிவமைப்பு மென்பொருளுக்கு உதவும். இதனால் ஒரு பொருளின் மேற்பரப்பு மாதிரிகளை உருவாக்கலாம். இது தொழில் துறையில் பெரிதும் பயன்படும்.

57. 20ஆம் நூற்றாண்டின் இரு கணித முன்னேற்றங்கள் யாவை?
1. சி. பி. மோரி சிறந்த அமெரிக்கக் கணித அறிஞர். இவர் 1952 களில் எழுப்பிய சிக்கலுக்கு டாக்டர் செவராக் தீர்வு கண்டார். இவர் பணி நுண்கணிதத்தில் சிறப்புள்ளது.