பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10.

11.

12.

15.

24

கி.பி. 5ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் வேறு பெயர்கள் பூஜ்ஜியம், சூன்யம், பிண்டு. இவர்கள் முழு எண்களில் சுழியைச் சேர்த்ததினால், குறை எண்கள் என்னும் புதிய எண்கள் தோன்றின. முழுமை பெற்ற எண்களை அவர்கள் அளப்பதற்குப் பயன்படுத்தினர்.

கணிதசார சாங்கிரம் என்னும் நூலை எழுதியவர் யார்?

மகாவீரர்.

தமிழில் கனக்குப் பற்றியுள்ள செய்யுள் எது? கணக்கதிகாரம். இந்தியர் முதன்முதலாகக் கண்டறிந்தது யாது? தொகுதி எண்களை மேலாகவும் பகுதி எண்களைக் கீழாகவும் எழுதும் முறையை இந்தியர் கண்டறிந்தனர். ஏழில் ஐந்து என்பதை 5/7 என்று எழுதினர். தொகுதி பகுதிக்கு அடிக்கோடு போட்டவர் யார்?

5 அரேபியர்; என்பதை என்று குறித்தனர்

ஆரியபட்டரின் சிறப்பென்ன? இவர் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இந்திய வானியல் அறிஞர். கேரளாவில் பிறந்தவர். புவி வட்டமானது, தன் அச்சில் தானே சுழல்கிறது என்று முதலில் நிறுவிக் காட்டியவர். திங்கள் மறைவு, கோள் மறைவு ஆகியவற்றிற்கு அறிவியல் விளக்கம் அளித்தவர். இவர் சிறந்த கணக்கறிஞரும் ஆவார். இவர் பையின் மதிப்பை 3.1416 என்று கணக்கிட்டவர். சைன் அட்டவ னையை முதன்முதலில் வகுத்த பெருமை இவரையே சாரும். முடிவுறாச் சமன்பாடாகிய ax-by-zcஎன்பதற்குத் தீர்வு கண்டவர். இவரை இந்திய அரசு எவ்வாறு சிறப்பித்தது? இந்தியா தான் முதலில் ஏவிய செயற்கை நிலாவிற்கு ஆரியபட்டர் என்று பெயரிட்டது. இது 1975 மார்ச் 19இல் ஏவப்பட்டது. - ஆரியபட்டர் இயற்றிய நூல்கள் யாவை? ஆரியபட்டியம், வராகமித்திரா, பஞ்ச சித்தாந்திகா.