30
14. இராமானுஜனைக் கடைசி வரை வாட்டிய இரு கொடுமைகள் யாவை?
வறுமை, உடல் நலக் குறைவு.
15. முக்கோணவியலில் அவர் செய்த சாதனை யாது?
தம் 13ஆம் வயதில் யூலரின் விரிவுகளைப் புதிய வடிவில் எழுதி வெற்றி கண்டார்.
16. மெட்ரிகுலேஷன் தேர்வில் எந்த ஆண்டு இராமானுஜன் வெற்றி பெற்றார்?
1903இல், அப்பொழுது அவருக்கு அகவை 16.
17. இராமானுஜன் கல்லூரியில் படித்த பாடங்கள் யாவை?
சமஸ்கிருதம், ஆங்கிலம், கணிதம், உடற்கூறு நூல், உரோமானிய - கிரேக்கர் வரலாறு.
18. கல்லூரியில் எஃப்ஏ தேர்வில் ஏன் தோல்வியடைந்தார்?
கணிதத்தில் அதிகம் நாட்டம் செலுத்தியதால்.
19. கல்லூரியில் அவர் கணித ஆசிரியர் யார்?
பேரா. இராமானுஜாசாரியார்.
20. இராமானுஜன் காலத்தில் வாழ்ந்த மேனாட்டு அறிவியல் அறிஞர்கள் யார்?
ரூதர்போர்டு, ஐன்ஸ்டீன், போர், சாட்விக், பிளாங்க், டிராக், எய்சன்பர்க், பெர்மி.
21. இராமானுஜன், காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த அறிவியல் அறிஞர்கள் யார்?
பி. சி. இராய். ஜே. சி.போஸ்.
22. இந்தியக் கணிதக் கழகம் எப்பொழுது தோற்றுவிக்கப் பட்டது? தோற்றுவித்தது யார்?
1907இல், பேராசிரியர் இராமசாமி.
23. இராமானுஜன் நாட்டம் செலுத்திய மூன்று கருத்துகள் யாவை?
எண்கள். தேற்றம், நிகழ்தகவு.
24. இராமானுஜத்திற்கு மாநிலக் கணக்காயர் அலுவலகத்தில் எப்பொழுது வேலை கிடைத்தது? இதற்கு உதவியவர்கள் யார்?
1912இல், பேரா.இராமசாமி அய்யர், பேரா.பி.வி. சேஷூ அய்யர்.