பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48.

49.

50.

51.

52.

34

நாமகிரித் தாயார்.

இவரின் அளப்பரிய கணிதத் திறமைக்கு சான்று ஒன்று தருக. லோன் என்பவரின் கோணஇயலை இராமானுஜம் 8 ஆம் வகுப்பு படிக்கும் பொழுதே முடித்துவிட்டார். இது இலண்டன் கணித ஆராய்ச்சியாளர் மகலனோபிசுக்கு

ஒரு புதிராக இருந்தது.

இலண்டனில் இராமானுஜனைப் பார்த்த இந்திய நாளிதழ் ஆசிரியர் யார்? அவருக்கு இராமானுஜம் கொடுத்த சிற்றுண்டி என்ன?

இந்து நாளிதழ் ஆசிரியர் கஸ்துபிரங்க அய்யங்கா. இவர்

இராமானுஜத்தைப் பார்த்த பொழுது, தாம் சுடச்சுடத் தயாரித்த வ்ெண்பொங்கலை அளித்தார். கஸ்தூரிரங்க அய்யங்காரும் மிக்க ஆவலுடன் அதை உண்டு மகிழ்ந்தார். இராமானுஜனின் இயற்கைக் கணித அறிவை விளக்குக. ஒரு சமயம் அவர் தம் நண்பர்களிடம், "வானில் கூட்டமாகப் பறந்து செல்லும் கொக்குகள் எவ்வாறு பறக்கின்றன?" என்று கேட்டார். - அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. இராமா னுஜம் கூறிய பதில்: "வானில் கொக்குகளின் பறக்கும் போது முக்கோணத்தின் வெளி இரு பக்கங்களிலுள்ள இரு நேர்க்கோடுகளின் அமைப்பில் இருக்கும். இந்த இரண்டுவரிசைகளுக்கு இடைவெளி தொலைவானது. விரிகோணத்தில் 130-140 அளவில் இருக்கும்." இது அவர்தம் வடிவ கணித இயல் அறிவைக் காட்டுகிறது. அச்சமயம் அங்குப் பறந்த கொக்குகளைப் பார்த்த பொழுது இராமானுஜன் கூறிய உண்மை புலப்பட்டது. இராமானுஜன் கருதுகோள் சிறப்பு யாது?

இதுஇராமானுஜன்டோசார்பின் அளவைப்பற்றியது. இக்

கருதுகோளை நிறுவியதற்காக 1978இல் பியரி டெலிக்னி என்பார் பீல்ட்ஸ் பதக்கம் பெற்றார். டோ என்பது கிரேக்க நெடுங்கணக்கில் 19ஆம் எழுத்துக்குறி (1994) ரோஜர்-இராமானுஜன் முற்றொருமைகள் என்பதின் சிறப்பு என்ன?