19.
20.
21.
22.
25.
24,
25.
42
ஒற்றை எண்ணும் இரு பகா எண்களின் கூட்டுத்தொகை என்னும் உய்மானம். இதுவரை இது மெய்ப்பிக்கப்படவில்லை. எ-டு. 2+2= 4, 6 = 343, 8 = 345. டிமாவர் என்பவர் யார்? - ஆங்கிலக் கணிதமேதை. 1733இல் இயல்நிலை வளைவரையின் கணிதச் சமன்பாட்டை இவர் கண்ட றிந்தார்.
வாண்டர் மாண்டே என்பவர் யார்? 1771இல் இவர் முதன்முதலில் அணிக்கோவையை
முறையாக விளக்கினார்.
ஜார்ஜ் கேண்டர் என்பார் யார்? 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த ஜெர்மன் கணிதஅறிஞர். கணம் என்னும் கருத்தை முதன்முதலில் கையாண்டவர். அதாவது கணக்கொள்கையை நிறுவி யவர் - .
போரியர் தேற்ற வரலாறு யாது?
போரியர் என்பார் கணக்கில் ஆர்வமுள்ளவர். இயற்பியலில் அதைப் பயன்படுத்த விரும்பியவர். இவர் வெப்பத்தின் பகுப்புக்கொள்கை என்று ஓர் ஆராய்ச் சியை 1822இல் வெளியிட்டார்.இதில் கணிதப்பகுப்பிற்கு
ஒரு புதுமுறையை அளித்தார். அறிவியல் சமன்பாடு
நிலையான அலகுத் தொகுதியைக் கொண்டிருக்க வேண்டும் என்று முதன்முதலில் கூறியவர். இக்கருத்தே போரியர் தேற்றம் எனப்பட்டது.இத்தேற்றத்தை 1823இல்
வெப்பத்தின்பகுப்புக்கொள்கை என்னும் தம் நூலில் விளக்கினார்.
பிரான்சைச் சார்ந்தவர். இராபர்ட் ஆர்கண்ட் என்பாரின் பங்களிப்பு யாது? இவர் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கணிதமேதை. 1806இல் சிக்கல் எண்கள் வரைபட அமைப்பை, வெளியிட்டவர். • ,
சிக்கல் எண்களை நன்கு ஆராய்ந்தவர்கள் யார்?
காரில் பிரெட்ஸ் காஸ், வில்லியம் ரோவர் ஆமில்டன். திசைச்சாரி கருத்துகளை வளர்த்தவர்கள் யார்?