பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14.

15.

16.

17.

18.

19.

20.

47

திருத்தமாக எழுதுதல் என்றால் என்ன? 2.87132971 என்பதை 2.87132 என்று குறைத்து எழுதுதல். ஆனால், இதை 2.87133 என்று திருத்த வேண்டும். சமமதிப்பு என்றால் என்ன? ஒரே மதிப்புள்ள இரு அளவுகளுக்கிடையே உள்ள உறவு. இது தொடர்பாகப் பயன்படும் குறிபாடுகள்

1,六 - சமமில்லை.

2. = - சமம்.

3. 8: - தோராயம்.

4. = - துல்லியமாகச் சமம். 5、2 - அணுகாச்சமம்.

சாராமாறி என்றால் என்ன? தானே மாறுபடும்பொழுது, மற்றொரு மதிப்பைத் தாக்கும் அளவு. எ-டு z என்னும் மாறி x,y என்னும் மாறிகளின் சார்பு எனில், z = f (x,y), பின் x,y என்பவை z ஐ உறுதி செய்யும் சாராமாறிகள். சுட்டளவு என்றால் என்ன? வெப்பநிலை, அழுத்தம் அண்மைத் தொலைவு முதலியவை.

மட்டு என்றால் என்ன? ஒர் அளவின் தனி மதிப்பு. இதில் அதன் குறி, திசை ஆகியவை கருதப்படுவதில்லை. எ-டு 5இன் மட்டு - 5 என்று எழுதப்படும். இது 5 ஆகும். ஒருகோடமை என்றால் என்ன? ஒரே நேர்க்கோட்டில் அமையும். எ-டு எவ்விரு புள்ளி களையும் ஒரு கோடு அமைவன என்று கூறலாம். ஏனெனில், அவை இரண்டின் வழியாக நேர்க்கோடு செல்லும். அதேபோல, ஒரே புள்ளியில் அவை இரண்டும் செயற்பட்டாலும் இணையாக இருந்தாலும், இருதிசைச் சாரிகளை ஒருகோடு அமைவன எனலாம். விரைவு என்றால் என்ன? ஓரலகு நேரத்தில் நகர்ந்த தொலைவு c = d / t . இது ஒரு திசையிலி.