பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97.

98.

99.

100.

101.

102.

105.

104.

59

வட்டங்களின் சமதொடு அச்சு எனப்படும். மூலம் (ரேடிகல்) என்றால் என்ன? N2. இங்கு N என்பது மூலக்குறி. கோடு என்றால் என்ன? ஒரு பரப்பில் இரு புள்ளிகளின் சேர்ப்பு. இதற்கு நீளம் உண்டு; அகலம் இல்லை. ஒரு பருமனே உண்டு. நேர்க்கோடு என்றால் என்ன? ஒரு தட்டையான பரப்பல் இரு புள்ளிகளுக்கிடையே உள்ள மிகக் குறைந்த தொலைவு. பொதுத் தொடுகோடு என்றால் என்ன? இரண்டிற்கு மேற்பட்ட வளைகோடுகளுக்குத் தொடு கோடாக அமையும் ஒரு தனிக்கோடு. இரு தொடு கோட்டுப் புள்ளிகளைச் சேர்க்கும் கோட்டின் நீளத்திற்கு உறுப்பு என்றும் பெயர். செங்குத்துக்கோடு என்றால் என்ன? மற்றொரு கோடு அல்லது தளத்திற்குச் செங்குத்தாக வுள்ள கோடு. இசையுங்கோடு (போலார் என்றால் என்ன? வட்டத்தின் உள்ளேயோ வெளியேயோ உள்ள புள்ளி P வழியாகச் செல்லும் கோடு, வட்டத்தை .ெR என்னும் புள்ளிகளில் வெட்டினால், ,ெR புள்ளிகளிடத்து வட்டத்திற்கு வரையும் தொடு கோடுகளின் வெட்டும் புள்ளிகளின் இயங்குரை, புள்ளி P இன் வட்டத்தைச் சார்ந்த இசைக் கோடு ஆகும். ஈற்றணுகுகோடு என்றால் என்ன? ஒரு வளைகோடு ஒரு நேர்க்கோடு நோக்கி அணுகும். ஆனால் அதைச் சந்திக்காது. எ-டு. அதிபரவளைவு இரு அணுகு கோடுகளைக் கொண்டது. குறுங்கோடு என்றால் என்ன? இரு புள்ளிகளுக்கிடையே ஒரு பரப்பிலுள்ள கோடு. இரு புள்ளிகளுக்கிடையே உள்ள மிகக் குறைந்த தொலைவு. ஒரு தளத்தில் ஒரு குறுங்கோடு ஒரு நேர்க் கோடு ஆகும்.