பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215.

216.

217.

218.

219.

220.

221.

73

12முகங்களைக் கொண்டபல கோணம் ஒழுங்கான ஈராறு முகமி. 12 அனைத்து ஒத்த முகங்களைக் கொண்டது. ஒவ்வொன்றும் ஒர் ஒழுங்கான ஐம்பக்க உருவமாகும். ஈராறுதசம எண் (duodecimal) என்றால் என்ன? 12இன் அடிப்படையில் அமைந்தது. இந்த எண் முறையில் பத்திற்குப் பதிலாக வேறுபட்ட எண்கள் இருக்கும். எ-டு.10,1 ஆகிய இரண்டும் A,B என்று குறிகள் பெறும்.

வெட்டல் என்றால் என்ன? 1. ஒரு புள்ளியில் இரண்டிற்கு மேற்பட்ட கோடுகள் ஒன்றை மற்றொன்று கடத்தல் அல்லது இரண்டிற்கு மேற்பட்ட வடிவியல் உருவங்கள் பொதுவாகக் கொண்டுள்ள புள்ளித் தொகுதி. 2. கணக் கொள்கையில் இரண்டிற்கு மேற்பட்ட கணங் களுக்குப் பொதுவான உறுப்புகளால் தோன்றும் கணம். வெட்டுத்துண்டு என்றால் என்ன? ஒரு தளம் அல்லது கோட்டின் பகுதி மற்றொரு தளம் அல்லது கோட்டால் வெட்டப்படுதல். மூலைவிட்டம் என்றால் என்ன? எதிர்மூலைகளைச் சேர்க்கும் விட்டம். எ-டு. ஒரு சதுரத்தின் மூலைவிட்டம் அதை இரு அனைத்து செங்கோண முக்கோணங்களாக வெட்டவல்லது. முடிச்சு என்றால் என்ன? வடிவப் பண்பியலில் ஒரு நூலை வளையமாக்கி, அதன் முனைகளைச் சேர்ப்பதனால் உண்டாகும் வளைகோடு. வடிவப் பண்பியலின் ஒரு பிரிவே முடிச்சுகளின் கணிதக் கொள்கை.

இடைநிலை என்றால் என்ன? கொடுக்கப்பட்ட இராசிகளை மதிப்புகளின் ஏறுவரிசை யிலோ இறங்குவரிசையிலோ அமைத்தபின், கிடைக்கும் நடு உறுப்பின் மதிப்பே இடைநிலை. பெரும வாய்ப்பு நிலை என்றால் என்ன? ஒரு சுட்டளவின் பெருமளவு வாய்ப்பு மதிப்பைக் கணக்கிடும் முறை.